நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 100 நாடுகளில் ஆப்பிளின் இந்த தயாரிப்பு வெளியாக உள்ளதாக தகவல்.
இந்த அறிமுகத்தின் விளைவாக ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் இந்த வீடியோக்கள் பார்பதற்காக சில மாற்றங்கள் செய்யப்படலாம்
ஆப்பிள் நிறுவனம் கடந்த திங்கட்கிழமையன்று செய்து நிறுவனங்களுக்கு ஒரு அழைப்பை விடுத்தது. அதன்படி வரும் மார்ச் 25 ஆம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஒரு புதிய தயாரிப்பின் அறிமுக விழா நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் பரவலாக கசிந்து வந்த தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் தொலைகாட்சி மற்றும் வீடியோக்களை உள்ளடக்கிய ஒரு தளத்தை அறிமுகம் செய்யப்போவதாக கூறப்பட்டது. அழைப்பிதழில் 'இட்ஸ் ஷோ டைம்' என மட்டுமே குறிப்பிட்டுள்ள நிலையில் இந்தப் புதிய அறிமுகம் என்னவாக இருக்கும் என்பதை இன்னும் கணிக்க முடியவில்லை.
நெடு நாட்களுக்கு முன்னர் வெளியான தகவல்படி, ஆப்பிள் நிறுவனம், சுமார் 14,000 கோடி ரூபாய் செலவில் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து தங்களது சார்பில் புதிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தை வெளியிடலாம் எனப்படுகிறது. தொலைக்காட்சி தளத்தைப் பொறுத்தவரை நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 100 நாடுகளில் ஆப்பிள் களமிறங்கும் எனப்படுகிறது.
இந்த அறிமுகத்தின் விளைவாக ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் இந்த வீடியோக்கள் பார்பதற்காக சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் அவை குறித்து நடக்கவுள்ள விழாவுக்குப் பின்னரே தெரிவிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது
ஆப்பிள் நிறுவனம், தனது ஆப்பிள் மியூசிக் தளத்தை அமேசான் மற்றும் சாம்சங்கின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் பயன்படத்த அனுமதி பெற்றுள்ள நிலையில் இந்தப் புதிய அறிமுகம் என்னவாக இருக்கும் என காத்திருந்துதான் பார்கவேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Honor Power 2 AnTuTu Benchmark Score, Colourways Teased Ahead of January 5 China Launch