Photo Credit: அமேசான்
அமேசான் இந்தியா தனது ஆப்பிள் ஃபெஸ்ட்-ஐ மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் அமேசான் விற்பனை தளம், ஐபோன் மாடல் போன்கள், மேக் புக் மடிக்கணினி, ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் வகை போன்ற கருவிகள் மீது தள்ளுபடி வழங்கும்.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகமான இந்த சேல் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை தொடரும். இந்த சேலுடன் இதர ஆஃபர்களான வட்டியில்லா தவனைத் திட்டம் போன்ற வசதியும், 2018 அம் ஆண்டு வெளியான சிறந்த ஐபோன் மாடல்கள் மீது தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தள்ளுபடி ஆஃபரில் ஐபோன் XS மேக்ஸ் தனது அறிமுக விலையான 1,09,900 ரூபாயிலுர்ந்து 104,900 ரூபாயாக குறைந்துள்ளது. அதுபோல அந்த மாடலுடன் வெளியான 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வகை போன்களுக்கும் தள்ளுபடி உண்டு. ஐபோன்XS (256ஜிபி) 5,000 ரூபாய் குறைந்து 109,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டில் வெளியான ஐபோன் மாடல்களான ஐபோன்XR 64ஜிபி வெர்ஷன் போனை ரூபாய் 70,999 ஆடர் செய்ய முடியும். 128 மற்றும் 256 ஜிபி போன்களிளும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தள்ளுபடி சேலில் ஐபோன் X 74,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தள்ளுபடி சேலில் ஐபோன் 8 ப்ளஸ் (64ஜிபி) ரூபாய் 66,999க்கும், ஐபோன் 8 ரூபாய் 57,999க்கும் வாங்க முடியும். அதுபோல் ஐபோன் 6s ரூபாய் 26,999 க்கு அமேசானின் ஆப்பிள் ஃபெஸ்ட் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆப்பிளின் இதர கருவிகளான மேக்புக் வரிசை மடிக்கணினிகளுக்கு ரூபாய் 15,000 வரை தள்ளுபடி கிடைக்கும். 2018 மேக்புக் ஏர் 9,000 தள்ளுபடி போக 1,05,900 ஆக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 9.7 இஞ்ச் உயரமுள்ள அப்பிள் ஐபேட் தள்ளுபடி ஆஃபரில் 25,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த அமேசான் ஆஃபர் சேலில் ஆப்பிள் வாட்ச் வகைகள் ரூபாய் 25,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீட்ஸ் சோலோ வயர்லெஸ் இயர்போன் தள்ளுபடி ஆஃபரில் ரூபாய் 19,999க்கு விற்பனையில் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்