Google Nest Hub மற்றும் Amazon Echo Show 8 போன்றவற்றைப் பெற ஜியோமி தனது புதிய ஸ்மார்ட் ஹோம் சாதனமான XiaoAI Touchscreen Speaker Pro 8-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 8-inch டிஸ்பிளே கொண்ட, XiaoAI Touchscreen Speaker Pro 8 நிகழ்நேர வானிலை அப்டேட், மல்டிமீடியா ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ அழைப்பு அம்சங்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளே மற்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை கட்டுப்படுத்தும் திறனை வழங்குகிறது. Android மற்றும் iOS சாதனங்களுடன் பொருந்தக்கூடிய தன்மையையும் Xiaomi வழங்கியுள்ளது.
Xiaomi XiaoAI Touchscreen Speaker Pro 8 ஆனது CNY 499 (சுமார் ரூ. 5,100) விலைக் குறியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் Xiaomi YouPin-ல் பட்டியலிடப்பட்டுள்ளது, இருப்பினும் இது டிசம்பர் 18 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். மேலும், இது Mi.com மற்றும் JD.com போன்ற ஆன்லைன் போர்ட்டல்கள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.
XiaoAI Touchscreen Speaker Pro 8-ன் உலகளாவிய விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Xiaomi XiaoAI Touchscreen Speaker Pro 8-ல் 1280x800 pixels resolution உடன் 8-inch multi-touch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில், far-field voice-recognition தொழில்நுட்பம் உள்ளது. மேலும், இந்த டிஸ்பிளே, மூன்று subwoofers உடன் இணைக்கப்பட்டு, 50.8mm 10W driver-ஐக் கொண்டுள்ளது.
XiaoAI Touchscreen Speaker Pro 8-ன் இணைப்பு விருப்பங்களில் dual-band Wi-Fi 802.11ac மற்றும் Bluetooth v5.0 ஆகியவை அடங்கும். இது குறைந்தது Android 4.4 அல்லது iOS 9.0 இயங்கும் சாதனங்களுடன் இணக்கமானது. மேலும், volume-ஐ சரிசெய்ய physical keys உள்ளன.
Amazon Echo Show 8 அல்லது Google Nest Hub-ஐ போலவே, XiaoAI Touchscreen Speaker Pro 8, Douyin, iQiyi மற்றும் Youku போன்ற ஓவர்-தி-டாப் (over-the-top - OTT) இயங்குதளங்களுடன் செயல்படுகிறது. இது குழந்தைகளை மையமாகக் கொண்ட உள்ளடக்கம் மற்றும் நினைவூட்டல்கள் மற்றும் அலாரங்களை அமைக்கும் திறனை வழங்குகிறது. பயனர்கள் முன் கேமராவைப் பயன்படுத்தி வீடியோ அழைப்புகளை செய்யலாம் அல்லது சாதனத்தை டிஜிட்டல் புகைப்பட சட்டமாகப் பயன்படுத்தலாம்.
குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி பணிகளைச் செய்ய XiaoAI digital assistant இருக்கிறது. மேலும், பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த ஒரு மையமாக இந்த சாதனம் செயல்பட முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்