Photo Credit: Weibo/ Oppo
ஓப்போ தனது ஸ்மார்ட் டிவியை 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று நிர்வாகி ஒரு சீன வலைத்தளத்திடம் தெரிவித்தார். சீன உற்பத்தியாளர், ஸ்மார்ட்போன்களுக்கு அப்பால் தனது போர்ட்ஃபோலியோவை விரிவாக்க திட்டமிட்டுள்ளதால் இந்த செய்தி வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச், ஓப்போ வாட்ச் மற்றும் இயர்பட்ஸையும் அறிமுகப்படுத்தியது - ஓப்போ என்கோ ஃப்ரீ மற்றும் என்கோ W31. சீன தொழில்நுட்ப போர்ட்டால் மேற்கோள் காட்டப்பட்ட நிர்வாகி தனது அறிக்கையில், நிறுவனம் தனது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) பார்வையில் செயல்படுகிறது.
MyDrivers-ன் அறிக்கையின்படி, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், ஸ்மார்ட் டிவியில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் முதல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யப்போவதாகவும் Oppo துணைத் தலைவர் லியு போ (Liu Bo) ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஓப்போ ஸ்மார்ட் டிவியைப் பற்றி போ எதையும் வெளிப்படுத்தவில்லை.
தனது சொந்த ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்துவதன் மூலம், பல சந்தைகளில் தங்களது சொந்த அளவிலான ஸ்மார்ட் டிவிகளைக் கொண்டிருக்கும் Xiaomi, Huawei, OnePlus, Motorola மற்றும் Nokia போன்ற நிறுவனங்களுடன் ஓப்போவும் சேர்கிறது. ஓப்போ ஸ்பின்-ஆஃப் Realme இந்த சந்தையில் நுழைகிறது.
ஓப்போ ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டால் இயக்கப்படும் என்றும், ஒன்பிளஸ் மற்றும் Samsung டிவிகளில் கிடைக்கும் அம்சங்களைக் கொண்டுவரும் என்றும் முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓப்போவின் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் தெரியவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்