இரைச்சல் ரத்துசெய்யும் ஹெட்ஃபோன்கள் மற்றும் உண்மையிலேயே வயர்லெஸ் இயர்போன்கள் தனிப்பட்ட ஆடியோவின் எதிர்காலத்திற்கான மையமாக இருப்பதால், பெருகிய எண்ணிக்கையிலான நிறுவனங்கள் ஆடியோவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகிளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மைக்ரோசாப்ட் இப்போது தனது முதல் உண்மையான வயர்லெஸ் இயர்போன்களான Surface Earbuds-களை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரவுள்ள Surface Earbuds-களின் விலை $249 (தோராயமாக ரூ .17,700) ஆகும். பயனர் பாதுகாப்பிற்கு உதவுவதற்காக மைக்ரோசாஃப்ட் ஆபிஸுடன் Surface Earbuds ஒருங்கிணைப்பு சுவாரஸ்யமான ஒன்றாகும். மேலும் மைக்ரோசாப்டின் சொந்த Cortana மட்டுமல்லாமல், பல்வேறு voice assistantsகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
மைக்ரோசாஃப்ட் Surface Earbuds-கள் சமீபத்திய நிகழ்வில் தொடங்கப்பட்டன. அங்கு பல்வேறு வன்பொருள் தயாரிப்புகளும் வெளியிடப்பட்டன. நிறுவனத்திலிருந்து முதன்மை ஆடியோ வரம்பில், இயர்போன்கள் $ 350 மைக்ரோசாஃப்ட் Surface Earbuds-களில் இணைகின்றன. மேலும் 24 மணிநேர பேட்டரி ஆயுள் வரை வழங்குவதாகக் கூறப்படுகிறது - இயர்போன்கள் 8 மணிநேரம் சாஜில் இருக்கும். மேலும், கூடுதலாக இரண்டு சார்ஜர்கள் பெட்டியில் வழங்கப்படும்.
உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தாமல், விரைவாகவும் எளிதாகவும் earpiece தட்டுவதன் மூலம் இசையைத் தொடங்க, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் Spotify ஒருங்கிணைப்பும் உள்ளது.
மைக்ரோசாப்ட் தனித்துவமான Surface Duo ஸ்மார்ட்போன் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளின் தொகுப்பையும் வெளியிட்டது. இந்த Android-powered சாதனம் Qualcomm Snapdragon 855 processor உடன், இரண்டு 5.6-inch திரை மற்றும் மடிக்கக்கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 2020-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்