Amazon, Flipkart மற்றும் Mi.com ஆகியவற்றில் பண்டிகை கால விற்பனையின் போது 2,50,000-க்கும் மேற்பட்ட Mi TV-களை விற்க முடிந்தது என்று Xiaomi கூறுகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் Mi TV-கள் அதிகம் விற்பனையாகும் TV-கள் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்த காலகட்டத்தில் நிமிடத்திற்கு 43 Mi TV-களை விற்க முடிந்தது. ஸ்மார்ட்போனை விட TV-கள் விற்பனை ஒரு பெரிய மைல்கல் ஆகும். விற்பனை காலத்தில், Xiaomi தனது Mi TV, தள்ளுபடியை வழங்கியதோடு, மேலும் பல புதிய தொலைக்காட்சிகளையும் அறிமுகப்படுத்தியது.
அமேசானில் விற்பனையாகும் ஐந்து ஸ்மார்ட் டிவிகளில் இரண்டு, Mi TV-கள் ஆகும். Mi TV 4C Pro 32-inch மற்றும் Mi TV 4A Pro (43-inch) ஆகியவை அமேசான் இந்தியா முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் Xiaomi கூறுகிறது. மதிப்பு அடிப்படையில் பிளிப்கார்ட்டில் Mi TV முதலிடத்தில் உள்ளது என்று சியோமி கூறியுள்ளது.
32-inch Mi LED TV 4C Pro தள்ளுபடி விற்பனையில், ரூ. 11,499-யாகவும், 43-inch Mi LED TV 4A Pro-வின் விலை ரூ. 19,999-யாக தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. Xiaomi சமீபத்தில் Mi TV 4X 65-inch (இந்தியாவில் இதுவரை இல்லாத), Mi TV 4X 43-inch, Mi TV 4X 50-inch மற்றும் Mi TV 4A 40-inch ஆகியவற்றை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது.
Xiaomi இந்தியாவின் Mi TV-யின் “எங்கள் ஸ்மார்ட் டிவி வணிகம் 2018-ல் தொடங்கிய பிறகு இந்தியாவில் நன்றாக வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்தும் Mi-ரசிகர்களிடமிருந்தும் பெற்ற எல்லா அன்பையும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த Mi TV-கள் அனைவருக்கும் பண்டிகை உற்சாகத்தை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று Eshwar Nilakanta ஒரு அறிக்கையில் கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்