ஜியோமியின் தொலைக்காட்சித் தொடர்கள் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு முக்கிய சந்தைகளில் சில வெற்றிகளைக் கண்டன. தற்போதைய Mi TV 4 தொடர் இரு நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிறது. ஜியோமியின் வீட்டுச் சந்தையான சீனாவில் நவம்பர் 5 ஆம் தேதி நிறுவனம் தனது அடுத்த தொலைக்காட்சியான Mi TV 5 தொடரை வெளிப்படுத்தத் தயாராக உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, நிறுவனம் தொலைக்காட்சித் தொடரின் சில விவரங்களை வெளிப்படுத்த சீன சமூக வலைதளம் வெய்போவிற்கு அழைத்துச் சென்றுள்ளது.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Mi TV கணக்கிலிருந்து Weibo-வில் ஒரு பதிவின் படி, புதிய டிவி வரம்பு நான்கு யூனிட் ஸ்பீக்கருடன் (4-unit speaker) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிவு இடது மற்றும் வலது சேனல்களில் ஒவ்வொன்றும் ஒரு வூஃபர் (Woofer) மற்றும் முழு அளவிலான ஸ்பீக்கரைக் கொண்டிருப்பதாக விவரிக்கிறது. better base, finer treble மற்றும் wide sound field ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. இது தவிர, டிவி பல்வேறு டால்பி (Dolby) மற்றும் டிடிஎஸ் (DTS) ஆடியோ ஃபார்மெட்களை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
புதிய தொலைக்காட்சித் தொடரின் வடிவமைப்பை விவரிக்கும் இரண்டாவது பதிவின் மூலம் மேலும் சில விவரங்கள் வெளிவந்தன. Mi TV 5 வரம்பு, Mi TV 4-ஐ விட 47 சதவீதம் மெல்லியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொலைக்காட்சிகளுக்கு சிறந்த திரை முதல் உடல் விகிதம் (better screen-to-body ratio) மற்றும் இறுக்கமான மூலைகளை (Tighter Corners) வழங்குகிறது. தடிமன் 5.9mm வரை குறைவாக Metal Body மற்றும் Back Plate போலவே மெலிதாக இருக்கும்.
அறிமுகத்திற்கு முன்னதாக தொலைக்காட்சிகள் குறித்த சில விவரங்களை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இருப்பினும், இப்போது தொடங்குவதற்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இறுதி தயாரிப்பு மற்றும் அதன் விலை விவரங்கள் மட்டுமே உண்மையிலேயே காணப்படுகின்றன. இந்தத் தொடர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் Amlogic T972 பிராசசரோடு அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது - இது தொலைக்காட்சி பிரிவுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகம். இது ஒருபுறம் இருக்க, HDR10 + மற்றும் MEMC ஆதரவும் இருப்பதாக கூறப்படுகின்றன.
இந்நிறுவனம் சமீபத்தில் தீபாவளி பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் பெரிய விற்பனை எண்களைப் பதிவுசெய்தது. அனைத்து சேனல்களிலும் 24 நாட்களில் 5,00,000 Mi TV யூனிட்களை விற்றதாகக் கூறியது. Mi TV 5 தொடரும் பிற்காலத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 5 வெளியீடு சீனாவுக்கு மட்டுமே.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.