வெறும் 1,299 ரூபாயில் Boat Airdopes 131 வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 22 ஆகஸ்ட் 2020 15:14 IST
ஹைலைட்ஸ்
  • பிளாக், ப்ளூ, பிங்க் என மூன்று நிறங்களில் கிடைக்கின்றன
  • USB டைப் சி சார்ஜிங் வசதி
  • Flipkart, Boat ஆன்லைன் ஷாப்பிங்கில் பெற்றுக்கொள்ளலாம்

ஏர்டோப்ஸ் 131 இயர்போனில் USB டைப் சி சார்ஜிங் வசதியுடன் வருகிறது

போட் நிறுவனம் ஏர்டோப்ஸ் 131 என்ற பெயரில் மிகக்குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 

இயர்போன், சவுண்ட் பார் உள்ளிட்ட ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னனி நிறுவனம் போட் ஆகும். இதன் தயாரிப்புகளுக்கு தனி வரவேற்பு உண்டு. அதற்கு ஏற்றவாறு விலையும் அமையும். 

இந்த நிலையில், போட் நிறுவனம் மிகக்குறைந்த விலையில் புத்தம் புதிய இயர்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் Boat Airdopes 131 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஆகும். இதன் விலை வெறும் 1,299 ரூபாய் மட்டுமே. இதன் விற்பனையும் இன்று ஆகஸ்ட் 22 முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் மூன்று விதமான நிறங்களில் போட்ஸ் இயர்போன்கள் கிடைக்கின்றன. அவை பிளாக், ப்ளூ, பிங்க் ஆகும்.

போட் ஏர்டோப்ஸ் 121 இயர்போனானது ரியல்மியின் இயர்பட்ஸ்க்கு போட்டியாக அமைகிறது. அண்மையில் ரியல்மி தரப்பில் இயர்பட்ஸ் S  1,799 ரூபாய்க்கும், ரியல்மி பட்ஸ் Q 1,999 ரூபாய்க்கும் அறிமுகமானது. 

போட் ஏர்டோப்ஸ் 131 சிறப்பம்சங்கள்:

போட்ஸ் தற்போது அறிமுகம் செய்துள்ள ஏர்டோப்ஸ் 131 இயர்போனில் USB டைப் சி சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இயர்போனில் பேட்டரி சக்தி 3 மணி நேரங்களுக்கு நீடித்து நிற்கும். இயர்போன் கேஸில் உடன் சேர்த்து ஒரு முறை சார்ஜ் செய்தால், மொத்தமாக 15 மணி நேரம் சார்ஜ் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இன்ஸ்ட்ா வேக் அன் பேர் (insta Wake-n-Pair) என்ற அம்சம் உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே ஸ்மார்ட்போன்கள் கனெக்ட் செய்திருந்தால், அதில் மீண்டும் ஒரே க்ளிக்கில் சட்டென்று இணைப்பை ஏற்படுத்த முடியும். மேலும், ப்ளுடூத் 5.0 தளத்தில் இது இயங்குகிறது. காதுகளுக்கு சரியாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


How to find the best deals during online sales? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Air-க்கு Reliance Digital-ல் ₹13,000 தள்ளுபடி: புதிய விலை ₹1,09,990
  2. X-ல் Following Feed-ஐ Grok AI வரிசைப்படுத்தும்: X Premium விலை குறைப்பு
  3. ഐഫോൺ 16 സ്വന്തമാക്കാൻ ഇതാണു മികച്ച അവസരം; ആമസോൺ ബ്ലാക്ക് ഫ്രൈഡേ സെയിലിലെ ഓഫറുകൾ അറിയാം
  4. Nothing Phone 3a Lite: ₹20,999 விலையில் 50MP கேமராவுடன் இந்தியால லான்ச்!
  5. ஆப்பிள் ஸ்டோர் நொய்டா: டிசம்பர் 11 லான்ச்! மும்பை அடுத்த ஆண்டு
  6. Sony LYT-901 வந்துருச்சு! 200 மெகாபிக்ஸல்... இனி போட்டோஸ் வேற லெவல்
  7. OnePlus-ன் Performance King! Ace 6T லான்ச் தேதி கன்ஃபார்ம்! 8000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு செம பவர்
  8. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே! Realme P4x வருது டிசம்பர் 4-ஆம் தேதி! காத்திருங்கள்
  9. WhatsApp-ல் உங்களுக்குப் பிடிச்ச AI Bot-க்கு டாட்டா! Meta AI மட்டும்தான் இனி உள்ளே வர முடியும்
  10. Xiaomi 17 Ultra டெலிஃபோட்டோ லென்ஸ் மட்டும் 200MP! DSLR-ஐ ஓரங்கட்டப் போற Xiaomi-யின் அடுத்த பிளான்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.