ஃபாசில் நிறுவனம் தனது சோலார் வாட்சை இந்தியாவில் இரண்டு டயல் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, கடிகாரம் சூரிய சக்தியில் இயங்குகிறது, மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த வாட்சை நான்கு மாதங்கள் வரை இயங்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த வாட்சின் பட்டைகள் ஏறக்குறைய 16 பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்று ஃபாசில் நிறுவனம் கூறுகிறது. இந்த சூரிய சக்தியில் இயங்கும் சோலார் வாட்ச், மேலும் நிலையான பொருட்களுடன் தயாரிப்புகளை உருவாக்குவதற்கான ஃபாசிலின் முதல் படியாகும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
ஃபாசில் சோலார் வாட்ச் 36 மிமீ மற்றும் 42 மிமீ டயல்-ஆப்ஷன்களில் கிடைக்க உள்ளது, இவை இரண்டின் விலையும் ரூ.9,995 ஆகும். இந்த இரண்டு வகை வாட்ச்கைளையும் உலகளவில் வாங்குவதற்கு 1,754 வாட்சுகள் மட்டுமே உள்ளன என்று ஃபாசில் கூறியுள்ளது. இந்த லிமிடெட் எடிசென் சோலார் வாட்சை வாடிக்கையாளர்கள் ஃபாசில் இந்தியா தளம் வழியாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபாசில் சில்லறை கடைகளிலிருந்தோ வாங்கலாம்.
கூடுதலாக, ஒவ்வொரு சோலார் வாட்ச் விற்பனையின் போது ஒரு மரத்தை நடவு செய்யும் என்று ஃபாசில் நிறுவனம் கூறுகிறது. அதற்காக இது ஈக்கோ மாட்சர் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த வாட்சை வாங்குபவர்கள் மரத்தின் பெயரைக் குறிப்பிடவும், அது நடப்பட்டதா என சரிபார்க்கவும், அதன் CO2 செயல்திறனைக் கண்காணிக்கவும் முடியும்.
இந்த ஃபாசில் சோலார் வாட்ச் ஒரு ஸ்மார்ட் வாட்ச் அல்ல, மேலும் வழக்கமான வாட்ச் செயல்பாடுகளை மட்டுமே வழங்குகிறது. வாட்ச்சின் வெளிப்புற வளையம் ஒரு சோலார் பேனலாக செயல்படுகிறது, ஒளியைக் கைப்பற்றி டயலுக்கு அடியில் உள்ள சூரிய மின்கலத்தைப் பயன்படுத்தி ஆற்றலாக மாற்றுகிறது என்று நிறுவனம் கூறுகிறது. சோலார் வாட்சுக்கு முழு சூரிய ஒளியின் கீழ் சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது. கடிகாரத்தில் குறைந்த பேட்டரியைக் குறிக்க, நிறுவனம் தனது சாதாரண ஒரு விநாடி இடைவெளிக்கு பதிலாக இரண்டு வினாடி இடைவெளியில் நகரத் தொடங்குகிறது என்று கூறுகிறது - எனவே, இதன் மூலம் சோலார் வாட்சை ரீசார்ஜ் செய்ய பயனர்களை அறிவுறுத்துகிறது.
இந்த வாட்ச் முழு சைவமாகும். புரியவலில்லையா? அதாவது சோலார் வாட்ச், ஃபாசில் சிறப்பம்சங்களை தயாரிப்பதில் எந்த விலங்குகளின் தயாரிப்புகளும் பயன்படுத்தப்படவில்லை. ஃபாசில் சோலார் வாட்ச் கருப்பு வண்ண டயலுடன் ஐந்து வண்ணமயமான ஸ்டாரப் விருப்பங்களுடன் வருகிறது. இந்த ஸ்டாரப்கள் நீலம், பச்சை, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன.
Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்