போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தற்போது மற்றொரு தொழில்நுட்ப கோளாறை சந்தித்துள்ளது. இந்த விமானங்கள் தற்போது தானாகவே கீழ் நோக்கிப் பயணித்துக்கொள்கிறதாம். இந்த புதிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தன் சேவையை தொடருவதில் இன்னும் தாமதம் ஏற்படவுள்ளது. முன்னதாகவே, எட்டு மாதங்களாக ஒரு தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியால் இந்த விமானத்தின் சேவைகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதங்கிழமையன்று போயிங் நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலில் கூட்டு விமான நிர்வாகம் (FAA) மற்றுமொரு தொழில்நுட்ப மேம்பாடு தேவை என்பதை கண்டறிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில்,"கூட்டு விமான நிர்வாகத்தின் முடிவையும் வேண்டுகோளையும் போயிங் ஏற்றுக்கொள்கிறது. இந்த நிர்வாகம் கண்டறிந்த அந்த மென்பொருள் மேம்பாட்டில் போயிங் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக, மென்பொருள் கோளாறு காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை வேலை செய்யாததால், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் லயன் ஏர் மற்றும் எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் விபத்தை சந்தித்து 351 இறந்து போனதற்கும் இந்த தொழில்நுட்ப கோளாறுதான் காரணம்.
ப்ளூம்பெர்க் இது பற்றி குறிப்பிடுகையில், மொத்தமாக 500 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்த கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 100 விமானங்கள், வாசிங்டனில் உள்ள இந்த ரென்டன் மையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த விமானத்தின் சேவைகளை போயிங் நிறுவனம் ரத்து செய்துள்ளதால், 1.4 பில்லியன் டாலர்கள் பயணச்சீட்டு செலவை இந்த நிறூவனம் சந்தித்துள்ளது. மேலும், இந்த விமானம் தரையில் இருக்கும் காலங்களில், மாத பராமரிப்பிற்காக ஒவ்வொரு விமாத்திற்கும் 2,000 டாலர்கள் செலவாகும். இந்த விமானங்கள் செப்டம்பர் மாதம் வரை எந்த ஒரு சேவையிலும் ஈடுபடுத்தப்படாமல், பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்கும் என குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக இந்த போயிங் விமானங்கள், வாசிங்டனில் உள்ள போயிங்கின் ரென்டன் மையத்தின் விமானங்களை நிறுத்துமிடம் முழுமையடைந்ததால், அந்த நிறுவனம் தன் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சில விமானங்களை நிறுத்தப்பட்டிருந்தது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலும் ஆனது.
மென்பொருள் கோளாறை சரி செய்யும் பணிக்காக செப்டம்பர் மாதம் வரை நிறுத்தப்பட்டுள்ள இதன் சேவை, இந்த புதிய பிரச்னை காரணமாக இன்னும் சில நாட்களுக்கு நிருத்தி வைக்கப்படலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்