இந்த மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ V70 FE, விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை அந்த சீன தொழில்நுட்ப நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள விவோ V70 எலைட் மற்றும் விவோ V70 ஆகியவற்றைத் தொடர்ந்து, V70 வரிசையில் இது மூன்றாவது மாடலாக இணைகிறது.
Vivo நிறுவனம் இந்த மாத ஆரம்பத்தில் இந்தோனேசியாவில் Vivo V70 FE மற்றும் Vivo V70 மாடல்களை அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த ‘Fan Edition’ மாடலை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.