அமேசானில் புதிய ரியல்மி நார்சோ போன் டீசர்: விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு.
அமேசான் தளத்தில் ரியல்மியின் புதிய நார்சோ ஸ்மார்ட்போன் குறித்த டீசர் வெளியாகியுள்ளது.இதன் மூலம் இந்தியாவில் விரைவில் புதிய பட்ஜெட் 5ஜி போன் அறிமுகமாவது உறுதியாகியுள்ளது.டீசர் படத்தில் மூன்று கேமராக்கள் கொண்ட இதன் பின்புற வடிவமைப்பு காட்டப்பட்டுள்ளது.இது ஏற்கனவே உள்ள நார்சோ 80 லைட் 5ஜி மாடலின் அடுத்த பதிப்பாக இருக்கலாம்.இது நார்சோ 90 தொடரின் கீழ் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் ரகசியமாக உள்ளன.