Realme Narzo 90 சீரிஸ் (Narzo 90 5G மற்றும் Narzo 90x 5G) டிசம்பர் 16 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது
Photo Credit: Realme
Realme Narzo 90 சீரிஸின் 7,000mAh Titan பேட்டரி, 60W சார்ஜிங், 4,000 nits பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே மற்றும் டிசம்பர் 16 அன்று அறிமுகமாகும் தகவல் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
பட்ஜெட் 5G மார்க்கெட்டுல Realme-க்குன்னு ஒரு பெரிய ஃபேன்ஸ் கூட்டம் இருக்கு! இப்போ அவங்களுடைய அடுத்த மாஸ் சீரிஸ் ஆன Realme Narzo 90 Series லான்ச்சுக்கு ரெடியாகிட்டு இருக்கு! இந்த சீரிஸ்ல வரப்போற Narzo 90 5G மற்றும் Narzo 90x 5G போன்களோட முக்கியமான அம்சங்கள், லான்ச்சுக்கு முன்னாடியே கம்பெனியே கன்ஃபார்ம் பண்ணியிருக்காங்க. இந்த Realme Narzo 90 சீரிஸ் இந்தியாவில் டிசம்பர் 16, 2025 அன்று மதியம் 12 மணிக்கு லான்ச் ஆகுது. இந்த போன்கள் Amazon மற்றும் Realme-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்துல விற்பனைக்கு வரும். இப்போ கன்ஃபார்ம் ஆன அம்சங்களைப் பத்தி பேசுவோம். இந்த சீரிஸ்ல இரண்டு முக்கியமான அம்சங்கள்ல Realme மாஸ் காட்டப் போகுது.
இதுதான் இந்த சீரிஸின் பெரிய ஹைலைட்! Narzo 90 மற்றும் Narzo 90x ஆகிய இரண்டு போன்களிலுமே பிரம்மாண்டமான 7,000mAh Titan பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது! இது இந்த செக்மென்ட்ல வர ஒரு மிகப்பெரிய பேட்டரி சைஸ்.
● சார்ஜிங்: இந்த பெரிய பேட்டரியை சார்ஜ் பண்ண 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்திருக்காங்க!
● சிறப்பம்சம்: அதுமட்டுமில்லாம, Narzo 90 மாடல்ல மட்டும் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) (கேம் விளையாடும்போது போன் சூடாகாமல் சார்ஜ் பண்ணலாம்) மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (இந்த போனை வச்சு மத்த போன்களை சார்ஜ் செய்யலாம்) வசதிகளும் இருக்கு!
● பேட்டரி லைஃப்: Narzo 90-ல ஒரு ஃபுல் சார்ஜ்-ல 24 மணி நேரம் ஆன்லைன் வீடியோ பார்க்கலாம், 8.1 மணி நேரம் கேம் விளையாடலாம்னு Realme சொல்றாங்க
டிஸ்பிளே விஷயத்துலயும் Realme சும்மா இல்ல! Narzo 90 சீரிஸ்ல இரண்டு மாடல்களுக்கும் டிஸ்பிளேல வித்தியாசம் இருக்கு:
● Narzo 90 5G: இந்த மாடல்ல ஒரு 4,000 nits பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே இருக்கு! சும்மா சொல்லக்கூடாது, இதுதான் இப்போதைக்கு இருக்கிற ஸ்மார்ட்போன்களிலேயே அதிகபட்ச பிரைட்னஸ்! வெயில்ல கூட டிஸ்பிளே பளிச்னு தெரியும்.
● Narzo 90x 5G: இந்த மாடல்ல 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,200 nits பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே இருக்கு. கேமிங் ரொம்ப ஸ்மூத்தா இருக்கும்னு சொல்லலாம்.
● கேமரா: இரண்டு போன்களிலுமே 50MP பிரைமரி ரியர் கேமரா இடம்பெறும்.
● பாதுகாப்பு: Narzo 90 5G மாடலுக்கு IP66 + IP68 + IP69 என மூன்று வகையான வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் கொடுத்திருக்காங்க! இது ஒரு பட்ஜெட் போனுக்கு பெரிய விஷயம்!
● AI அம்சங்கள்: AI Eraser, AI Ultra Clarity போன்ற புதிய AI கேமரா அம்சங்களும் இதுல இருக்கு.
இந்த Realme Narzo 90 சீரிஸ் பட்ஜெட் செக்மென்ட்ல ஒரு பெரிய சவாலை ஏற்படுத்தும். இந்த போன் பத்தி உங்க கருத்து என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video
12A Railway Colony Now Streaming on Amazon Prime Video: What You Need to Know