வோடபோனின் ரூ.47, ரூ.67 மற்றும் ரூ.78 ஆகிய மூன்று புதிய ப்ளான்கள் அறிமுகம். இந்த ப்ளான்கள் காலர் டியூன் மற்றும் சேவை வேலிட்டியை வழங்குகின்றன. ரூ.67 பேக் 90 நாட்கள் வேலிடிட்டியாகும். ரூ.47 (VAS -Value Added Services) பேக் 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே வழங்குகிறது. முன்னதாக, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வோடபோன் அதன் நெட்வொர்க் பெயரை மாற்றியது.
ரூ.47 ப்ரீபெய்ட் ப்ளானானது, அன்லிமிடெட் பாடல் மாற்றத்துடன் காலர் டியூன் பலன்களை வழங்குகிறது. இந்த ப்ளான் 28 நாட்கள் வேலிடிட்டியாகும். ரூ.67 VAS பேக்கும் அதே பலன்களை வழங்குகிறது. ஆனால் 90 நாட்கள் வேலிடிட்டி ஆகும்.
ரூ.78 VAS பேக்கும் அதே பலன்களை வழங்குகிறது. ஆனால் 89 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த பேக்குகள் நிறுவனத்தின் வலைத்தளத்திலும், மும்பை வட்டத்தில் உள்ள சந்தாதாரர்களுக்கான செயலியிலும் காணப்படுகின்றன.
இந்த பேக்குகள் அனைத்தும், டேட்டா, பேச்சு நேரம் அல்லது வேறு எந்த பலன்களுடனும் வரவில்லை. இதன் நோக்கம் சந்தாதாரரின் சேவை வேலிடிட்டியை விரிவாக்குவதாகும். இந்த ப்ளான்கள் விரைவில் மற்ற வட்டங்களில் கிடைக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்