ரூ. 251க்கு ரீசார்ஜ் செய்தால் 50 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். 28 நாட்களுக்கு வேலிடிட்டி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து போன் மற்றும் எஸ்.எம்.எஸ். அழைப்புகள் ஏதும் இதில் கிடையாது.
வீட்டிலிருந்து பணி செய்பவர்களுக்கு இந்த ஆஃபர் சிறந்ததாக கருதப்படுகிறது.
ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்களுக்காக வோடஃபோன் நிறுவனம் சூப்பரான ஆஃபர் ஒன்றை ரூ. 251 -ல் வழங்குகிறது. அதுபற்றிய தகவல்களை பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான தகவல்தொடர்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
அந்த வகையில் இணையம் மூலமாக நடைபெறும் இந்த பணிகளுக்கு அதிக டேட்டா செலவு ஆகும். வைஃபை வசதி வைத்திருப்பவர்கள் என்றால் பரவாயில்லை. அது இல்லாமல் டேட்டா ப்ளானை யூஸ் பண்ணுபவர்களுக்காக வோடபோன் 251 ப்ளானை அறிவித்துள்ளது.
இதன்படி ரூ. 251க்கு ரீசார்ஜ் செய்தால் 50 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். 28 நாட்களுக்கு வேலிடிட்டி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து போன் மற்றும் எஸ்.எம்.எஸ். அழைப்புகள் ஏதும் இதில் கிடையாது.
வீட்டிலிருந்து பணி செய்பவர்களுக்கு இந்த ஆஃபர் சிறந்ததாக கருதப்படுகிறது.
சென்னை, குஜராத், அரியானா, ஒடிசா, தமிழகத்தின் சில பகுதிகளில் இந்த ஆஃபர் ப்ளான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வோடஃபோனுக்கு போட்டியாக மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் ப்ளானை அறிவிக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Fact Check: Is Microsoft Really Planning to Rewrite Windows 11 in Rust Using AI?