டி.டி.எச் சேவையில் கடும் போட்டி நிலவிவரும் நிலையில், மற்ற நிறுவனகளுக்கு சவால்விடும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது ‘டாடா ஸ்கை'. தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது டாடா ஸ்கை நிறுவனம்.
அது என்னவென்றால், சேனல்களை ஒவ்வொரு தொகுப்பாக பிரித்து வழங்க இருக்கிறது டாடா ஸ்கை நிறுவனம். இதில் அந்த தொகுப்புகள் எப்படி வகைபடுத்தப்பட்டுள்ளது என்றால், அந்த அந்த மொழி வாரியாக சேனல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
பகுதி வாரியாக தங்கள் மொழிகளில் வெளியாகும் சேனல்களை மட்டுமே காணும் வாடிக்கையாளர்களை கவரவே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறுகிறது, டாடா ஸ்கை.
மலையாளம், தெலுங்கு, பெங்காலி, ஒடியா, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டங்கள், தமிழ் மொழியிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரூ.164/- திட்டத் தொகை கொண்ட முதல் தொகுப்பில் 16 சாதாரன சேனல்கள் மற்றும் 6 HD சேனல்களையும் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழில் மினி-திட்டத்தை அறிவித்துள்ள இந்த நிறுவனம், Rs.81/-க்கு 8 HD சேனல்களை கொண்டுள்ளது இந்த திட்டம். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் சிலவற்றில், இலவசமாக வரும் சேனல்களையும் பெறும் வசதியும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்