டாடா ஸ்கை பிராட்பேண்ட் தனது இணையதளத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் லேண்ட்லைன் சேவையை கிண்டல் செய்கிறது.
டாடா ஸ்கை பிராட்பேண்ட் அன்லிமிடெட் மாதாந்திர ப்ளான்கள் ரூ.900-யில் இருந்து தொடங்குகிறது
டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துகொண்டிருக்கிறது. ஆம், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச லேண்ட்லைன் சேவையை விரைவில் கொண்டுவரவுள்ளது. ஊரடங்கு காலத்தில், டாடா ஸ்கை பிராட்பேண்டின் இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்களை ஈர்க்க பெரிதும் பயனுள்ளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, Jio Fiber மற்றும் Airtel இந்த் சேவையை வழங்கின. தற்போது, Tata Sky Broadband, அவர்களுக்கு போட்டியாக இந்த சேவையை கொண்டுவந்துள்ளது என்று கூறலாம். இது தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்கை வழங்குகிறது.
ப்ளானின் ஆரம்ப விலை ரூ.900 ஆகும்.
இது 100Mbps இணைய வேகத்தை வழங்குகிறது.
ப்ளான் ஆப்ஷன்கள் - மூன்று மாதம், ஆறு மாதம், பன்னிரண்டு மாதம்
இருப்பினும், இந்த ப்ளான் எப்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பதில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Xiaomi 17 Max Tipped to Launch With Snapdragon 8 Elite Gen 5, Larger Battery Than Xiaomi 17 Ultra