ஜியோவின் ‘கொண்டாட்டம் ஆஃபர் திட்டம்' சில பயணாளர்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 2 ஜிபி டேட்டா விகிதம் வழங்கப்பட உள்ளது. 5 நாட்களுக்கு இந்த டேட்டாவின் வேலிடிட்டி இருக்கும். முதன்முதலாக இதே திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, 10ஜிபி டேட்டாவை நான்கு நாள் வேலிடிட்டியில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஆஃபர் குறித்து வாடிக்கையாளர்கள் ஜியோ ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு ஜியோ தன் வாடிக்கையாளர்கள் 149 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 100 சதவிகிதம் கேஷ்பேக் ஆஃபர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 10 ஜிபி டேட்டா 5 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் ஜியோ ஆஃபர் கொண்டாட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சலுகை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் சலுகை விவரங்களை மை ஜியோ ஆப் மூலம் ‘மை ப்ளான்' பகுதியில் சென்று அறிந்துகொள்ளலாம். நவம்பர் 30-ம் தேதி வரையில் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொண்டாட்ட ஆஃபர் ஜியோவின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு தற்போது வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்