இவ்வளோ கம்மி விலையிலா? Jio கஸ்டமர்கள் குஷி!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 23 ஆகஸ்ட் 2024 12:05 IST
ஹைலைட்ஸ்
  • வரம்பற்ற jio 5ஜி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்
  • ரிலையன்ஸ் ஜியோ இணையதளத்தில் கிடைக்கிறது
  • ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவியும் வருகிறது

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது  Reliance Jio 198 ரூபாய் திட்டம் பற்றி தான். 

முகேஷ் அம்பானியின் Reliance Jio நிறுவனம் Airtel நிறுவனத்தை தூக்கி சாப்பிடும்படியான திட்டத்தை களமிறக்கி உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. கட்டண உயர்வுக்கு பிறகு மலிவான விலையில் புதிய திட்டத்தை கஸ்டமர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து நேரம் பார்த்து அடித்துள்ளது Jio. ஏர்டெல்லில் ரூ.379 மதிப்பில் தொடங்கும் 5ஜி திட்டம் இப்போது ஜியோவில் வெறும் ரூ.198 மதிப்பில் கிடைக்கிறது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு நாடு முழுவதும்  5ஜி சேவையை வழங்க தொடங்கியது. வாடிக்கையாளர்களை ஈர்க்க அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக வழங்குகின்றன. இதனால், 5ஜி வேகத்தில் டேட்டா கிடைக்கும் திட்டங்களையே கஸ்டமர்கள் அதிகம் ரீசார்ஜ் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால் இப்போது கட்டண உயர்வுக்கு பிறகு 5ஜி டேட்டாவுக்கு மினிமம் 349 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது.

ஏர்டெல்லில் 379 ரூபாய், ஜியோவில் 349 ரூபாய் மதிப்பிலான திட்டத்தையும் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைத்தது. ஆனால் இப்போது ஜியோ வெறும் 198ரூபாய்  மதிப்பில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்து. இதனால் ஏர்டெல் மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல்லுக்கு மாறும் கஸ்டமர்களையும் இழுத்துள்ளது ஜியோ நிறுவனம். 

ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள்

Jio Cheapest 5G Plan இதுவாகும். இதன் மூலம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது.  ஒரு நாளுக்கு 2 ஜிபி வீதம் 5ஜி டேட்டா கிடைக்கிறது. ஆகவே 5ஜி வேகத்தில் 28 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். தினமும் 2 ஜிபி முடிந்துவிட்டால் 64 கேபிபிஎஸ் வேகத்தில் இலவசமாகவும் கிடைக்கிறது.

இதன் கூடவே Unlimited Local, STD கால் மற்றும் Roaming Voice Calls சலுகைகள் கிடைக்கின்றன. தினமும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். விலை மிகவும் மலிவாக இருப்பதுடன், 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால் நல்ல சலுகை கொண்டதாக இருக்கிறது.

அன்லிமிடெட் டேட்டா மட்டுமல்லாமல் 5ஜி வேகத்தில் ஒரு பிளான் வேண்டுமானால் இதைவிட மலிவான விலைக்கு வேறு யாரும் தருவதில்லை. இதனுடன் ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளுக்கான வசதியும் கிடைக்கிறது. ஆனால் ஜியோ சினிமா பிரீமியம் மட்டும் இதனுடன் கிடைக்காது. 

எந்த நிறுவனமும் திட்டத்தை வைத்திருக்கவில்லை. இதுபோன்ற திட்டங்கள் மூலம் கஸ்டமர்களை முழு வீச்சில் 5ஜி சேவைக்கு மாற்றும் வேலையை ஜியோ செய்துவருகிறது. சொல்லப்போனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி திட்டங்கள் மட்டுமே கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Reliance Jio, Reliance Jio 198 plan, Reliance Jio 5G, Reliance Jio True 5G

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Sony LYT-901 வந்துருச்சு! 200 மெகாபிக்ஸல்... இனி போட்டோஸ் வேற லெவல்
  2. OnePlus-ன் Performance King! Ace 6T லான்ச் தேதி கன்ஃபார்ம்! 8000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு செம பவர்
  3. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே! Realme P4x வருது டிசம்பர் 4-ஆம் தேதி! காத்திருங்கள்
  4. WhatsApp-ல் உங்களுக்குப் பிடிச்ச AI Bot-க்கு டாட்டா! Meta AI மட்டும்தான் இனி உள்ளே வர முடியும்
  5. Xiaomi 17 Ultra டெலிஃபோட்டோ லென்ஸ் மட்டும் 200MP! DSLR-ஐ ஓரங்கட்டப் போற Xiaomi-யின் அடுத்த பிளான்
  6. POCO C85 5G: Dimensity 6100+, ஃப்ரண்ட் டிசைன் லீக் - இந்தியா வருகை உறுதி!
  7. சார்ஜ் பத்தி கவலையே வேணாம்! OnePlus Ace 6 Turbo-வில் 9,000mAh பேட்டரி! Snapdragon 8s Gen 4 பவர் வேற!
  8. Nord 4 யூசர்ஸ் கொண்டாடுங்க! OxygenOS 16 அப்டேட் வழியா AI மோட், புது Widget-கள், செம கஸ்டமைசேஷன் ஆப்ஷன்ஸ் கிடைச்சுருக்கு
  9. Google Circle to Search-ல இப்படி ஒரு பவர் கிடைச்சுருக்கு! AI மோட் மூலமா இனி நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் டக்குனு பதில்!
  10. வருத்தம் தரும் செய்தி! நம்ம டெய்லி Chat-க்கு ஹெல்ப் பண்ண Microsoft Copilot AI, வாட்ஸ்அப்-ல இருந்து விலகுறாங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.