கார்கிலில் 145 நாட்களுக்கு பிறகு மொபைல் இணைய சேவை தொடங்கியது!

tracker InternetShutdowns.in படி, 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் 105 இணைய பணிநிறுத்தங்கள் பதிவாகியுள்ளன.

கார்கிலில் 145 நாட்களுக்கு பிறகு மொபைல் இணைய சேவை தொடங்கியது!

ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளுடன் கார்கிலிலும் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன

ஹைலைட்ஸ்
  • இப்பகுதியில் பிராட்பேண்ட் சேவைகள் ஏற்கனவே செயலில் இருந்தன
  • கார்கிலுக்கு, முழுமையான சேவைகள் மீட்டமைக்கப்பட்டன
  • வியாழக்கிழமை, உ.பி.யில் இணைய இணைப்பை அரசாங்கம் நிறுத்தியது
விளம்பரம்

அரசியலமைப்பின் 370-வது பிரிவின் விதிகளை ரத்து செய்ததை அடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மொபைல் இணைய சேவைகள் லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் 145 நாட்களுக்கு பிறகு மீட்டமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ரத்து செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் லேண்ட்லைன் மற்றும் மொபைல் சேவைகளை முற்றுகையிடுவதோடு, தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி இடைநீக்கமானது துல்லியமாக நடந்தது. கடந்த நான்கு மாதங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காத நிலையில், கார்கிலுக்கு திரும்புவதற்கான முழுமையான இயல்புநிலையின் அடிப்படையில் இந்த சேவைகள் மீட்டமைக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிராட்பேண்ட் சேவைகள் ஏற்கனவே கார்கிலில் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் மதத் தலைவர்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மறுசீரமைப்பு இறுதியாக கார்கிலில் செயல்படுத்தப்பட்டாலும், ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் மொபைல் இணைய சேவைகள் இன்னும் நிறுத்தப்பட்டுள்ளன. InternetShutdowns.in-ல் கிடைத்த தட பதிவின்படி, 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் 105 இணைய பணிநிறுத்தங்கள் பதிவாகியுள்ளன.

மேற்கு உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர், புலந்த்ஷஹர், முசாபர்நகர், மீரட், ஆக்ரா மற்றும் ஃபிரோசாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இணைய இணைப்பை அரசாங்கம் நிறுத்தியபோது, வியாழக்கிழமையன்று சமீபத்திய இடைநீக்கம் வெளிப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடந்து வரும் போராட்டங்களின் போது தவறான தகவல்தொடர்புகளைத் தடுப்பது மற்றும் போலி செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதே, இதன் நோக்கமாக இருந்தது.

கடந்த வாரம், டெல்லியின் சில பகுதிகளில் இணைய இருட்டடிப்பு விதிக்கப்பட்டது. இது CAA-க்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் பதிலளித்தது. டெல்லி காவல்துறை துணை ஆணையர், தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கு குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை இயக்கும் சேவைகளை, தலைநகரில் இணைய இணைப்புடன் ஐந்து மணி நேரம் நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வாறு கூறப்பட்டால், ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் இருக்கும் இணைய சேவைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நிறுத்தம், நாட்டின் மிக நீண்ட கால பணிநிறுத்தம் ஆகும். கார்கில் உட்பட லடாக்கின் சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட இடைநீக்கத்துடன் இது விதிக்கப்பட்டது. மேலும், 2019-ஆம் ஆண்டில் மட்டும், மாநிலத்தில் இணைய சேவைகளை 50 முறைகளுக்கு மேல் அரசாங்கம் தடைசெய்தது.

India Leads the World in Internet Shutdowns

WhatsApp Users in Kashmir Being Removed as Internet Shutdown Crosses 120 Days

Internet Shutdowns Have No Place in Digital India

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  2. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  3. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  4. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  5. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  6. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  7. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  8. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
  9. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  10. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »