கிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்திருக்கிறது ஜியோ நிறுவனம். இந்தியா விளையாடிய முக்கிய மேட்சுகள் அனைத்தும் ஜியோ டிவியில் கண்டு களிக்கும் வகையில் ஜியோவும், ஸ்டார் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஏற்கனவே லைவ் செய்யப்பட்ட 20 ஓவர் போட்டிகள், ஒண்டே, டெஸ்ட் மேட்சுகள் உள்ளிட்டவற்றை ஜியோ டிவியில் பார்க்கலாம். ஹாட்ஸ்டார் லைவ் செய்யும் மேட்சுகளையும் பார்க்க ஜியோ டிவி அனுமதி அளிக்கிறது.
இதே வசதியை போட்டி நிறுவனமான ஏர்டெல்லும் செய்து வருகிறது. இதுகுறித்து ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிவேக டேட்டாவுடன் மொபைலில் கண்டு ரசிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ டிவி ஒளிபரப்பு செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பெற வேண்டும் என்றால் ஜியோ டிவி ஆப்புடன், பயனாளர்கள் ஆக்டிவான ஜியோ நம்பரையும் வைத்திருக்க வேண்டும். இதற்காக கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்று ஜியோ தெரிவித்துள்ளது.
ஸ்டார் இந்தியாவுடனான பார்ட்னர்ஷிப் குறித்து, ஜியோ இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறகையில், இந்தியாவின் சிறந்த விளையாட்டு நிகழ்வுகளை ஒவ்வொரு இந்தியரும் சிறந்த தரத்துடன் கண்டு ரசிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் மூலமாக சிறந்த அனுபவத்தை ஜியோ பயனாளர்கள் பெறுவார்கள் என்றார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்