ஜியோவின் ரூ.4,999 ப்ரீபெய்ட் ப்ளானில் அதிரடி மாற்றம்! - வேலிடிட்டி எவ்வளவுன்னு தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ, 350 ஜிபி டேட்டா மற்றும் 360 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.4,999 ப்ளானை மீண்டும் கொண்டுவந்துள்ளது.

ஜியோவின் ரூ.4,999 ப்ரீபெய்ட் ப்ளானில் அதிரடி மாற்றம்! - வேலிடிட்டி எவ்வளவுன்னு தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ ரூ.4,999 ப்ளான் ஜியோ ஆப்ஸுக்கு இலவச சந்தாவுடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • ரிலையன்ஸ் ஜியோ ரூ.4,999 ப்ரீபெய்ட் ப்ளானை மீண்டும் கொண்டு வந்துள்ளது
  • இது ஜியோ-டூ-ஜியோ அல்லாத போன்களுக்கு 12,000 நிமிட அழைப்பை வழங்குகிறது
  • ரூ.4,999 ப்ரீபெய்ட் ப்ளானில் 350 ஜிபி டேட்டா உள்ளது
விளம்பரம்

ஜியோ தனது ரூ.4,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை மீண்டும் கொண்டுவந்துள்ளது. இது அதன் நீண்ட கால ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களில் ஒன்றாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. இந்த ப்ளான், 350 ஜிபி டேட்டா மற்றும் 360 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. நீங்கள் அன்லிமிடெட் ஜியோ-டூ-ஜியோ அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்-ஐ பெறலாம். ஜியோ ப்ளான், ஜியோ-டூ-ஜியோ அல்லாத போன்களுக்கு 12,000 நிமிட அழைப்புடன் வருகிறது. 

ரூ.4,999 ஜியோ ப்ளானை ஜியோ வலைத்தளத்தின் (Jio website) நீண்ட கால பேக் பிரிவில் காணலாம். மற்ற எல்லா ப்ளான்களையும் போலவே, இது ஜியோ செயலிகளுக்கான சந்தாவுடன் வருகிறது. 350 ஜிபி அதிவேக டேட்டாக்களுக்கு பிறகு, பிரெளசிங் வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறையும். இந்த புதிய ப்ளானின் இருப்பை முதன்முதலில் ட்ரீம்.டி.டி.எச் கண்டறிந்தது, இது சனிக்கிழமை ஜியோ தளத்தில் கிடைத்தது என்று கூறுகிறது.

மற்ற நீண்ட கால ப்ளான்களில், ஜியோ பயனர்களுக்கான ரூ.1,299 ப்ளான், 336 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் 24 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 64 கேபிபிஎஸ் வரை குறைகிறது. இது ஆரம்பத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் வகையில் வழங்கப்பட்டது, பின்னர் அது கடந்த மாதம் 336 நாட்களாக குறைக்கப்பட்டது. மறுபுறம், ரூ.2,121 ப்ளான் 336 நாட்களுக்கு வேலிடிட்டியாகும், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டாவுடன் வருகிறது. 1.5 ஜிபி தாண்டிய பிறகு இது 64 கே.பி.பி.எஸ் வரை குறைகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். முந்தையது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் டிசம்பரில் “2020 புத்தாண்டு சலுகையின்” ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட பழைய ரூ.2,020 ப்ரீபெய்ட் ப்ளான் பழையதை மாற்றியது.

நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ரூ.4,999 ப்ளானை வாங்கலாம் மற்றும் பணம் செலுத்துதல் Paytm, PhonePe, Mobikwik, அத்துடன் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் / ஏடிஎம் கார்டு போன்ற பிற கட்டண முறைகள் மூலமாகவும் பணம் செலுத்தலாம். இந்த ரீசார்ஜ், MyJio செயலி மற்றும் பிற மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் வழங்குநர்கள் வழியாகவும் கிடைக்கிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »