ஜியோ இணைய வசதிக்கு போட்டியாக பிஎஸ்என்எல் குறைந்த விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பேக் அறிமுகம் செய்துள்ளது.
27 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ள இந்த பேக்கில், டேட்டா, அன்லிமிடட் அழைப்பு வசதிகளை கொண்டுள்ளது. 7 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த பேக்கில், 1ஜிபி டேட்டா, 300 மெசேஜஸ், அன்லிமிடட் அழைப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. வரும் ஆகஸ்டு மாதல் 6 ஆம் தேதி முதல் இந்த பேக் விற்பனைக்கு வர உள்ளது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது
27 ரூபாய் மதிப்பில் மற்ற பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பேக் இருந்தால், அவற்றின் விலை மாற்றி அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்தை பொறுத்த வரையில், 52 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 7 நாள் வேலிட்டியுடன் 1.05 ஜிபி டேட்டா, 70 மெசேஜ்கள் கொண்டுள்ளது. எனவே, பிஎஸ்என்எல் அறிமுகம் செய்திருக்கும் 27 ரூபாய் பேக், ஜியோவிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
இந்த விலையில், ஏர்டெல், வோடாஃபோன் போன்ற மற்ற நிறுவனங்களும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை விற்பனை செய்து வருகிறது. ஏர்டெல் பொறுத்தவரை, 47 ரூபாய் பேக்கில், 150 நிமிடங்கள் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் அழைப்புகள். 500 எம்பி 3ஜி/4ஜி டேட்டா ஆகியவை கொண்டுள்ளது. வோடாஃபோனில், 47 ரூபாய்க்கு 28 நாட்கள் வேலிடிட்டி உடன் 7,500 நொடிகள் அல்லது 125 நிமிடங்கள் லோக்கல், எஸ்டிடி அழைப்புகள், 50 லோக்கல், நேஷனல் மெசேஜ், 500 எம்பி 3ஜி/4ஜி டேட்டா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்