தினமும் 500 எம்பி டேட்டா, 300 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் அழைப்புகள் 28 நாட்களுக்க்கு வழங்கப்படும்
டெலிகாம் நிறுவனமான ஜியோவின் வருகை ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளித்துள்ளது. தொடர்ந்து சேவைகளின் விலைக்குறைப்பால், மற்ற போட்டி நிறுவனங்களும் விலைக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஜியோ நிறுவனம் ஜியோ போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 99 ரூபாய் ரீசார்ஜில் தினமும் 500 எம்பி டேட்டா சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஹங்கமா மான்சூன் ஆஃபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃபரின் கீழ் தினமும் 500 எம்பி டேட்டா, 300 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் அழைப்புகள் 28 நாட்களுக்க்கு வழங்கப்படும். அதேபோல, 594 ரூபாய் ரீசார்ஜில் 6 மாத காலத்திற்கு இலவச கால்கள் மற்றும் டேட்ட்டாவை பெற முடியும் என்றும் ஜியோ அறிவித்துள்ளது.
அதேபோல, ஏற்கனவே இருக்கும் பழைய ஜியோ போன்களை 501 ரூபாய் செலுத்தி, புதிய போன்களாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், இந்த ஆஃபரின் கீழ் மொபைல் வாங்கினால் 101 ரூபாய்க்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iOS 26.2 Beta 1 Reportedly Includes References to 'Apple Creator Studio'