நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் 182.8 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது
தற்போது ஜியோவின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 39.8 கோடியாக உயர்ந்துள்ளது
ஜியோ நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காகவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும் பல புதிய திட்டங்களையும், ஆஃபர்களையும் அறிவித்து வருகிறது. இதன் பலனாக தற்போது முதல் காலாண்டில் 99 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டு விவரங்களை ஜியோ தரப்பில் வெளியானது. அதன்படி, ஜூலை 30 ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட 99 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர். தற்போது ஜியோவின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 39.8 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் 182.8 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பால் மற்ற நிறுவனங்கள் எல்லாம் முடங்கி இருக்க, ஜியோ மட்டும் உச்சத்துக்குச் சென்று விட்டது.
இதனிடையே வாடிக்கையார்களுக்காக ஜியோ பிஓஎஸ் லைட் என்ற ஆப் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மற்றவர்களுக்கு நாம் ரீசார்ஜ் செய்தால், 4.16 சதவீத கமிஷன் நமக்கு கிடைக்கிறது. மேலும், இன்கம்மிங் கால் வேலிடிட்டியும் அதிகரிக்கிறது.
சராசரி வருவாயைப் பொறுத்தவரையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து, ஒரு மாதத்திற்கு 140.3 ரூபாய் ஜியோ நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்தாண்டு 130.6 ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில், இந்தாண்டு 7.4 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. வயர்லெஸ் டேட்டாவைப் பொறுத்தவரையில் 30.2 சதவீதம் வளர்ச்சியயைக் கண்டுள்ளது. வாய்ஸ் டிராபிக் 13.2 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Raat Akeli Hai: The Bansal Murders OTT Release: When, Where to Watch the Nawazuddin Siddiqui Murder Mystery
Bison Kaalamaadan Is Now Streaming: Know All About the Tamil Sports Action Drama