ஜியோ சமீபத்திய திட்ட விலைகள் இறுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன, இது டிசம்பர் 6 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். ஜியோ புதிய திட்ட விலைகள் குறித்த விவரங்கள் இங்கே.
ஜியோ புதிய திட்ட விலைகள், நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது
ஜியோ புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை 'ஆல் இன் ஒன் திட்டங்கள்' (All-in-One Plans) என்று நிறுவனத்தால் அழைக்கப்படுகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவைப் பின்பற்றி திருத்தப்பட்ட மொபைல் கட்டணங்களை, விலை உயர்வுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. நினைவுகூர, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஞாயிற்றுக்கிழமை முதல் தங்கள் திருத்தப்பட்ட திட்டங்களை அறிவித்தன. அவை டிசம்பர் 3 முதல் நடைமுறைக்கு வந்தன. அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ, விலைகளை உயர்த்துவதாக சுட்டிக்காட்டியிருந்தாலும், திருத்தப்பட்ட விலைகளை இன்று வரை நிறுத்தி வைத்திருந்தது. ஜியோவின் சமீபத்திய திட்டங்கள், அதன் பழைய திட்டங்களுடன் ஒப்பிடும்போது 39 சதவீதம் வரை அதிக விலை கொண்டவை. இந்த திட்டம் டிசம்பர் 6 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.
புதிய திட்டங்கள், தோராயமான கணக்கீடுகளின்படி, அதன் போட்டியாளர்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உருவாக்கிய புதிய அழைப்பு மற்றும் டேட்டா கட்டண திட்டங்களை விட 25 சதவீதம் வரை மலிவானவை. புதிய கட்டணங்களின்படி, 84-நாள் செல்லுபடி மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுக்கு ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ. 555 செலுத்த வேண்டும். இது முந்தைய அம்சமான ரூ. 399-ஐ விட 39 சதவீதம் அதிகமாகும்.
Jio, Airtel, Vodafone Idea Seek Floor Price for Data Tariffs, COAI Letter to TRAI Reveals
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்திய திட்டங்கள் ரூ. 153 திட்டத்தில் இருந்து ரூ. 199, ரூ. 198 திட்டத்தில் இருந்து ரூ. 249, ரூ. 299 திட்டத்தில் இருந்து ரூ. 349, ரூ. 349 திட்டத்தில் இருந்து ரூ. 399, ரூ. 448 திட்டத்தில் இருந்து ரூ. 599, ரூ. 1,699 திட்டத்தில் இருந்து ரூ. 2,199, மற்றும் ரூ. 98 திட்டத்தில் இருந்து ரூ. 129-யாக விலையை உயர்த்தியுள்ளது.
ரூ. 199 திட்டம் ஒரு மாத கால செல்லுபடியாகும் திட்டமாகும். இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும், ரூ. 249-க்கு மற்ற போட்டியாளர்களின் திட்டங்களை விட சுமார் 25 சதவீதம் மலிவானது. இதேபோன்ற சலுகைகளை முந்தைய திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ஜியோ நுகர்வோருக்கு 300 சதவீதம் வரை கூடுதல் பலன்களை, ஜியோ புதிய திட்டங்கள் அளிப்பதாகக் கூறப்படுகிறது.
Airtel, Vodafone Idea New Plans Live: How the Updated Prepaid Recharge Plans Compare
குறிப்பிட்டுள்ளபடி, இந்தத் திட்டங்கள் டிசம்பர் 6-ஆம் தேதி நேரலையில் ஒளிபரப்பப்படும். மேலும், தற்போதுள்ள எல்லா தொடு புள்ளிகளிலிருந்தும் (touchpoints) தேர்வு செய்யலாம். ஜியோவிலிருந்து ஜியோ காலுக்கு அன்லிமிடெட் அழைப்பு, ஜியோ அல்லாத மொபைல் அழைப்புகளுக்கு 1,000 நிமிட fair usage policy (FUP) மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் 1 மாதத்திற்கான புதிய திட்டம், ரூ. 199-க்கு வருகிறது.
| Jio new plan prices | Data | FUP for offnet calls in minutes | Validity (days) |
|---|---|---|---|
| Rs. 129 | 2GB | 1,000 | 28 |
| Rs. 199 | 1.5GB/ day | 1,000 | 28 |
| Rs. 249 | 2GB/ day | 1,000 | 28 |
| Rs. 329 | 6GB | 3,000 | 84 |
| Rs. 349 | 3GB/ day | 1,000 | 28 |
| Rs. 399 | 1.5GB/ day | 2,000 | 56 |
| Rs. 444 | 2GB/ day | 2,000 | 56 |
| Rs. 555 | 1.5GB/ day | 3,000 | 84 |
| Rs. 599 | 2GB/ day | 3,000 | 84 |
| Rs. 1,299 | 24GB | 12,000 | 365 |
| Rs. 2,199 | 1.5GB/ day | 12,000 | 365 |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show