ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஃபைபர் வசதி இன்று முதல் ஜியோ கிகாஃபைபர் என்று அழைக்கப் படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஃபைபர் வசதி இன்று முதல் ஜியோ கிகாஃபைபர் என்று அழைக்கப் படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொது சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தியாவின் 1100 நகரங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்டு சேவைகள் அளிக்கப்பட உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ கிகாஃபைபர்
பல மாதங்கள் நடைப்பெற்ற சோதனை ஓட்டத்திற்கு பிறகு, ஜியோ கிகாஃபைபர் சேவைகள் பொது மக்களின் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 1Gbps வேகம் வரை செயல்படும் இந்த ஜியோ கிகாஃபைபரின் சேவை, நாட்டில் உள்ள 1100 நகரங்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
ஜியோ கிகா ஃபைபர் சேவையில், அல்ட்ரா எச்.டி டி.வி, மல்டி-பார்டி வீடியோ கான்ஃபெரென்சிங், வாய்ஸ் அஸிஸ்டெண்ட், விளையாட்டு, ஷாப்பிங், ஸ்மார்ட் ஹோம் என பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும், ஜியோ கிகா ஃபைபர் சேவையை பயன்படுத்தி வி.ஆர் ஹெட்செட்ஸ் மூலம், 360 டிகிரி படத்தை 4K ரெஸல்யூஷனில் பார்க்க முடியும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிரண் தாமஸ் தெரிவித்திருக்கிறார்.
மை ஜியோ ஆப் அல்லது ஜியோ.காம் இணையதளத்தில் இந்த ஜியோ கிகாஃபைபருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த முன்பதிவு வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.
"கிகா டிவி பயன்பாட்டில், வாய்ஸ் வசதி மைக்ரோஃபோனோடு இருக்கும் ரிமோட் மூலம், ஜியோ சினிமா, ஜியோ டி.வி. ஜியோ டி.வி. அழைப்பு, போன்றவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோ சேவைகள் இனி Mbps வேகத்தை விடுத்து Gbps வேகத்திற்கு முன்னேறியுள்ளது” என்று இஷா அம்பானி தெரிவித்தார்.
ஜியோ பயன்பாட்டிற்கு வந்த 22 மாதங்களில் 215 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Supernova’s First Moments Show Olive-Shaped Blast in Groundbreaking Observations