இந்தியாவில் உள்ள மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் வாடிக்களையாளர் எண்ணிக்கையைப் பற்றி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம் சுமார் 29 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம், 93.24 லட்ச வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் புதிதாக பெற்றுள்ளது.
ட்ராய் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, டிசம்பரிலிருந்து 59.74 லட்சம் அதிகரித்து 118.19 கோடியாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 0.51 சதவிகிதம் வளர்ச்சியை வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் பிரிவில் இந்தியா பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தும் இருக்கும் 1,181.97 மில்லியன் வாடிக்கையாளர்களில் 1,022.58 மில்லியன் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் கடந்த ஜனவரி மாதம் பயன்பாட்டில் இருந்ததாக ட்ராய் கூறுகிறது.
மத்திய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை ஜனவரி மாதம், 9.83 லட்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 11.53 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மற்றொரு முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனமான பாரதி ஏர்டெல், இந்த ஆண்டு 1.03 லட்சம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துத் தங்களது வாடிக்கையாளர் எண்ணிக்கையை 34.04 கோடியாக அதிகிரத்துள்ளது.
வோடஃபோன் ஐடியா நிறுவனம், ஜனவரி மாதம், 35.87 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 41.52 கோடியாக குறைந்துள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்