ஜியோ ஃபைர் வாடிக்கையாளர்களுக்கு ஜீ5 ப்ரீமியம் இலவசம்! இனி நாள் முழுவதும் சினிமாதான்

லாக்டவுனில் ஜீ5 ப்ரீமியத்தின் சந்தாதாரர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர் என்றும், இதனால் ஜியோவுடன் இணைந்து இந்த சிறப்பு சலுகைகளை அளிப்பதாகவும் ஜீ5 இந்தியா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு துணைத் தலைவர் மன்ப்ரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.

ஜியோ ஃபைர் வாடிக்கையாளர்களுக்கு ஜீ5 ப்ரீமியம் இலவசம்! இனி நாள் முழுவதும் சினிமாதான்

ஜீ5 ப்ரீமியத்தின் மாதாந்திர சந்தா ரூ. 99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்
  • Jio Fiber users will be automatically logged in to Zee5 Premium
  • Zee5 is also in plans to integrate its service in the JioTV+ app
  • Jio Fiber users recently received Amazon Prime subscription offer
விளம்பரம்

ஃபைபர் நெட்வொர்க்கில் கலக்கி வரும் ஜியோ ஃபைபர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜீ5 ப்ரீமியத்தை இலவசமாக அளித்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் அமேசான் ப்ரைம் ஓராண்டு பயன்பாட்டை ஜியோ ஃபைர் தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்திருந்தது.

ஜீ5 ப்ரீமியமை பொருத்தளவில் 4,500க்கும் அதிகமான படங்கள், 120க்கும் அதிகமான ஜீ5 ஒரிஜினல் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் உள்ளன.

12 மொழிகளில் செமையான என்டர்டெய்ன்மென்ட்டை இந்த ஜீ5 ப்ரீமியம் அளித்து வருகிறது.

ஜியோ ஃபைபர், ஜீ5, ஜியோ டிவி உள்ளிட்டவை விரைவில் செட் டாப் பாக்ஸாக அளிக்கப்படவுள்ளது.

ஜீ5 ப்ரீமியத்தின் மாதாந்திர சந்தா ரூ. 99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபரில் சில்வர் அல்லது அதற்கு அதிகமான ப்ளானில் இருப்பவர்களுக்கு ஜீ5 ப்ரீமியம் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் சில்வர் ப்ளான் ரூ. 849 ஆகும்.

இதனை வீட்டில் ஆப் வழியே டிவி மூலமாக ஜீ5 ப்ரீமியத்தை பார்த்து மகிழலாம்.

லாக்டவுனில் ஜீ5 ப்ரீமியத்தின் சந்தாதாரர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர் என்றும், இதனால் ஜியோவுடன் இணைந்து இந்த சிறப்பு சலுகைகளை அளிப்பதாகவும் ஜீ5 இந்தியா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு துணைத் தலைவர் மன்ப்ரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம்தான் ஜியோ ஃபைபரில் கோல்டு மற்றும் அதற்கு மேல்தரமான ஜியோ ஃபைர் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் ஓராண்டுக்கான சந்தா இலவசம் என்று அறிவிக்கப்பட்டது.

ஏர்டெல்லுடனும் ஜீ5 தனது வர்த்தகத்தை விரிவாக்கியுள்ளது. ஏர்டெல் சந்தாதாரர்கள் ரூ. 149 மற்றும் அதற்கு மேல் உள்ள ரீசார்ஜ் ப்ளான்களை பயன்படுத்தி ஜீ5 ப்ரீமியத்தை இலவசமாக பார்த்து மகிழலாம்.


Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஃபோல்டபிள் போன் சந்தையில் போர் ஆரம்பம்! ஆப்பிள் ஐபோன் போல்டுக்கு போட்டியாக ஒப்போவின் 'வைடு' டிஸ்ப்ளே போன்
  2. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் OnePlus 13R - பிளிப்கார்ட்டின் மெகா டீல்
  3. சாம்சங்கின் புது பிளான்! மிரட்டலான சிறப்பம்சங்களுடன் வரும் Galaxy M17e - எதோட ரீபிராண்ட் தெரியுமா?
  4. ஒரு தடவை சார்ஜ் போட்டா 3 நாளைக்கு கவலை இல்ல! ஒன்பிளஸின் மெகா லான்ச் - Turbo 6 & 6V அதிரடி விலை மற்றும் விவரம்
  5. விவோவின் மெகா பிளான்! Vivo X200T-ல் நான்கு 50MP கேமராக்கள்? ஆப்பிள், சாம்சங்கிற்கு டஃப் கொடுக்க வரும் புதிய மான்ஸ்டர்
  6. கேமிங் கிங் ரெடி! ஜனவரி 15-ல் லான்ச் ஆகும் iQOO Z11 Turbo - மிரட்டலான சிறப்பம்சங்கள் கசிந்தது
  7. கேமராவுக்கே சவால் விடும் 200MP லென்ஸ்! புது வரவு Oppo Reno 15 சீரிஸ் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
  8. இன்பினிக்ஸின் பலமான ஆட்டம் ஆரம்பம்! 6500mAh பேட்டரி மற்றும் புது XOS 16 உடன் வரும் Infinix Note Edge
  9. வெறும் ரூ. 15,999-க்கு ஒரு கார்வ்டு டிஸ்ப்ளே போனா? Poco M8 5G அதிரடி லான்ச்! சலுகை விவரங்கள் உள்ளே
  10. ஸ்லிம் போன்-ல இவ்வளவு பவரா? ஜனவரி 20-ல் வரும் Moto X70 Air Pro! Snapdragon 8 Gen 5 மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமரா
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »