புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது Jio Fiber....! முழுசா தெரிஞ்சுகோங்க....

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 நவம்பர் 2019 17:23 IST
ஹைலைட்ஸ்
  • Jio Fiber, ரூ.351 மாதாந்திர திட்டத்தில் 50GB டேட்டாவை வழங்குகிறது
  • ரூ.199 திட்டம், 7 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா அணுகலைக் கொண்டுவருகிறது
  • Jio Fiber 2 திட்டங்களுக்கும் complimentary வீடியோ அழைப்பை வழங்குகிறது

Jio Fiber முன்பு, அதன் மிகக் குறைந்த மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ. 699-க்கு வழங்கியது

ஜியோ ஃபைபர் (Jio Fiber) வாடிக்கையாளர்கள் ரூ. 351 மாதாந்திர திட்டம் மற்றும் ரூ. 199 வாராந்திர திட்டத்தை பெற்றனர். தற்போதுள்ள ரூ. 699 மற்றும் ரூ. 8.499 ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் திட்டங்களுடன், இரண்டு புதிய ப்ரீபெய்ட் பிராட்பேண்ட் திட்டங்களும் வந்துள்ளது. புதிய ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் பிராட்பேண்ட் திட்டங்கள் டேட்டா அணுகலுடன் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் complimentary டிவி வீடியோ அழைப்பு போன்ற பலன்களைத் தருகின்றன. ரூ. 351 ஜியோ ஃபைபர் திட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு 10Mbps பதிவிறக்க வேகத்தில் 50 ஜிபி டேட்டா ஒதுக்கீடு கிடைக்கும். இந்த ரூ. 199 ஜியோ ஃபைபர் திட்டம், ஏழு நாட்களுக்கு 100Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா அணுகலைக் கொண்டுவரும்.

ரிலையன்ஸ் ஜியோ ஆன்லைனில் வெளியிட்டுள்ள புதுப்பிப்பின்படி, ரூ. 351 ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் திட்டம் FTTX மாதாந்திர திட்டம் - PV - 351 என கிடைக்கிறது. இந்த திட்டம் ஜி.எஸ்.டி உடன் ரூ. 414.18. இது 50Mbps வேகத்தில் மாதத்திற்கு 50 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் குரல் அழைப்பு ஆதரவை வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் புதிய மாதாந்திர திட்டத்தை மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஆண்டு அல்லது இருபது ஆண்டுகளாக மேம்பட்ட கட்டண விருப்பத்தின் மூலம் பெறலாம்.

கூடுதலாக, ரூ. 351 மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டம், ஜியோ ஃபைபர் ரூ. 199 வாராந்திர ப்ரீபெய்ட் திட்டம் FTTX வாராந்திர திட்டத்தை சேர்த்துள்ளது - PV - 199 என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் குரல் அழைப்பு பலன்களை 100Mbps-ல் ஏழு நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா அணுகலுடன் வழங்குகிறது.

Plan Benefits Validity
Rs. 351 Unlimited voice calling, 50GB data at 10Mbps, complimentary TV video calling 30 days
Rs. 199 Unlimited voice calling, unlimited data at 100Mbps, complimentary TV video calling 7 days

அதிகாரப்பூர்வ பட்டியலின் படி, இரண்டு புதிய ஜியோ ஃபைபர் ப்ரீபெய்ட் திட்டங்களும் "customers possessing a compatible Customer Premise Equipment" கிடைக்கின்றன. இந்த Customer Premise Equipment (CPE) ரூ. 3,500 மற்றும் ரூ. 1,500 என இரண்டு வெவ்வேறு வகைகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்பு விருப்பங்களில் கிடைக்கும்.

ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை நேரடியாக ஆட்டோ டெபிட் பயன்முறையில் தங்கள் முக்கிய இருப்பைப் பயன்படுத்தி பெறலாம். மாற்றாக, அவர்கள் தகுதியான ரீசார்ஜ் பயன்முறையைப் பயன்படுத்தி திட்டங்களைப் பெறலாம்.

குறிப்பாக ரூ. 351 மாதாந்திர ப்ரீபெய்ட் பிராட்பேண்ட் திட்டம், ஜியோ ஃபைபர் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும் மற்றும் பல வகையான பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கும் ACT ஃபைபர்நெட் மற்றும் ஏர்டெல் போன்றவற்றுக்கு எதிராக போட்டியிட உதவும். புதிய திட்டங்களை ஆரம்பத்தில் DreamDTH தெரிவிக்கப்பட்டது.

இப்போது வரை, 100Mbps-ல் 100GB டேட்டா FUP-ஐ உள்ளடக்கிய ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ ஃபைபர் வழங்குகிறது. ஆரம்பகால பயனர்களுக்கு முன்னோட்ட சலுகையும் வழங்கப்பட்டது. இருப்பினும், புதிய ஜியோ ஃபைபர் பயனர்களுக்கு அதன் கட்டண திட்டங்களிலிருந்து வருவாயை ஈட்டத் தொடங்குவதற்கான முன்னோட்ட சலுகையை ஜியோ சமீபத்தில் நிறுத்தியது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Jio Fiber, Rs 351 Jio Fiber plan, Rs 199 Jio Fiber plan, Reliance Jio, Jio, JioFiber
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Portronics Beem 540 Projector: Android 13 OS, 100 இன்ச் திரை - சலுகையுடன் வாங்குங்க!
  2. iPhone 16-க்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? ₹9,901 குறைப்புடன் Flipkart, Amazon-ல் மாஸ் சலுகைகள்!
  3. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  4. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  5. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  6. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
  7. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  8. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  9. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  10. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.