இந்த நிலையில், ஓராண்டுக்கான டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ஜியோ இலவசமாக வழங்கவுள்ளது. இதனால் இரு நிறுவனங்களும் நல்ல பலன் அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
Photo Credit: Jio
புதிய ஆஃபர் தொடர்பான டீசலை ஜியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் ஓ.டி.டி. பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு இலவசமாக வழங்கவுள்ளது.
இது பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள் மற்றும் கிரிக்கெட், பிரீமியர் லீக் மற்றும் ஃபார்முலா 1 உள்ளிட்ட நேரடி விளையாட்டுகளுடன் டிஸ்னி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் கிட்ஸ் உள்ளடக்கத்திற்கான வீடியோக்கள் மற்றும் நேரலைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வரும்.
இந்த அதிரடி ஆஃபர் எப்போது வரும் என்கிற தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால் வெகு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாட்ஸ்டார் டிஸ்னி விஐபி இலவச சந்தா அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவானது இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சமீபத்திய அத்தியாயங்களை தினமும் காலை 6 மணிக்கு வழங்குகிறது. புதிய இந்திய திரைப்பட பிரீமியர்ஸ், டிஸ்னி + உள்ளடக்கம் மற்றும் பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களும் இதில் அடங்கும். நேரடி விளையாட்டு லைவ் நிகழ்ச்சிகளையும் இதில் காண முடியும்.
ஏர்டெலுக்கு நெருக்கடி கொடுக்கும் ஜியோ?
கடந்த மாதம் ஏர்டெல் ரூ. ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் 401 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்ததது.. இந்த திட்டத்தில் 3 ஜிபி அதிவேக தரவு ஒதுக்கீடு மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி அறிவிக்கப்பட்டது.
ஜியோ தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சலுகைகளை வழங்குவதன் மூலம் ஏர்டெல்லை நெருக்கடிக்கு தள்ளப்போவதாக தெரிகிறது. ஜியோ கடந்த காலத்தில் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாக்களை வழங்கியது.
2016 ஆம் ஆண்டில், ஜியோ ப்ளே வழியாக அதன் சந்தாதாரர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வழங்கியதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைவர் பயனர்கள் சமீபத்தில் ஜியோ டிவி + சேவையின் மூலம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் பெற்றனர்.
இந்த நிலையில், ஓராண்டுக்கான டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ஜியோ இலவசமாக வழங்கவுள்ளது. இதனால் இரு நிறுவனங்களும் நல்ல பலன் அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
Can Netflix force Bollywood to reinvent itself? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?