பாரத் சன்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் புதன்கிழமையன்று ரூ. 491 பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் சிக்கனமான பிராட்பேண்ட் திட்டம் என கூறப்படும் இந்த திட்டத்தில், தினசரி 20 ஜீபி டேட்டா வரை , 20 Mbps வேகத்தில் கிடைக்கும். மேலும் இதில் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியும் அளிக்கிறது .
பிஎஸ்என்எல் இந்த திட்டத்தைப் பற்றிய அறிவிப்பை ட்விட்டர் பதிவில் வெளியிட்டது. பிஎஸ்என்எலின் உயர்மட்ட குழு உறுப்பினர் என்.கே மேத்தா, இந்த ரூ. 491 திட்டம் தனிநபர் மற்றும் சிறு தொழில்முனைவோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர் மையங்கள், உரிமையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிடைக்கிறது.
சந்தையில் 4 ஜீ நெட்வொர்க்கான ஜியொவின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட போட்டியை தக்கவைக்க பிஎஸ்என்எல் தன்னுடைய மொபைல் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களின் கட்டணங்களை மாற்றியமைத்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது பிராட்பாண்ட் சேவையில் முன்னணியில் இருக்கும் பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த புதிய சேவை ஜியோ அறிமுகம் செய்கிறது.
பிஎஸ்என்எல் சமீபத்தில் அதனுடைய ஃபைபர் அல்லாத பிராட்பாண்ட் சேவைகளின் கட்டணத்தை மாதம் ரூ. 99 முதல் கிடைக்கும் வகையில் திருத்தம் செய்தது. கடந்த மாதம் இறுதியில் பிஎஸ்என்எல் புதிதாக லேப்டாப் மற்றும் கணிணி வாங்குபவர்களுக்கு இரண்டு மாதம் 20 எம்பீபிஎஸ் பிராட்பாண்ட் சேவையை இலவசமாக வழங்கியது. இந்த வாடிக்கையாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் ரூ. 99 மதிப்புள்ள பிஎஸ்என்எல் 45 ஜீபி திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
ஜுன் மாதத்திலிருந்து பிஎஸ்என்எல் இரண்டு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. இவை ஃபைப்ரோ காம்போ 777 திட்டத்தின் கீழ் 500 ஜீபி டேட்டா 50 எம்பீபிஎஸ் வேகத்திலும், ஃபைப்ரோ காம்போ 1277 திட்டத்தின் கீழ் 700 ஜீபி டேட்டா 100 எம்பீபிஎஸ் வேகத்திலும் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்