Photo Credit: Bloomberg
ரிலையன்ஸ் ஜியோ தனது வரவிருக்கும் 5ஜி நெட்வொர்க்கில், ஒரே ஒரு சீன நெட்வொர்க் பங்கையும் கொண்டிருக்காது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் சமீபத்திய இந்திய பயணத்தின் போது தெரிவித்தார்.
ஒரு சீன உபகரணத்தைக் கூட பயன்படுத்தாத உலகின் ஒரே நெட்வொர்க் Reliance Jio மட்டுமே என்று செவ்வாயன்று புதுதில்லியில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான உரையாடலின் போது ட்ரம்பிடம் அம்பானி கூறினார், இதன் டிரான்ஸ்கிரிப்ட் வியாழக்கிழமை வைட் ஹவுஸால் வெளியிடப்பட்டது.
ஜியோ தென் கொரிய நிறுவனமான சாம்சங்கை 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளுக்கு நெட்வொர்க்கிங் கூட்டாளராக கொண்டுள்ளது.
"நீங்கள் 4ஜி பயன்படுத்துகிறீர்கள், 5ஜி-யையும் பயன்படுத்த போகிறீர்களா?" என்று டிரம்ப் கேட்டபோது, "நாங்கள் 5ஜி பயன்படுத்த போகிறோம். உலகில் ஒரே ஒரு சீன கூறும் இல்லாத ஒரே நெட்வொர்க் நாங்கள் தான். "
அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் (Wilbur Ross) கடந்த அக்டோபரில் அமெரிக்கா தனது கூட்டாளிகள் ஹவாய் நிறுவனத்தின் 5ஜி தொலைதொடர்பு கருவிகளைப் பயன்படுத்தினால், அவர்கள் தங்களை பாதுகாப்பு அபாயங்களுக்கு உட்படுத்தக்கூடும் என்று கவலைப்படுவதாகக் கூறியிருந்தார்.
சீனாவின் ஹவாய், இந்தியாவின் 5ஜி வரிசைப்படுத்தல்களில் இருந்து விலகி இருக்க டிரம்ப் நிர்வாகம் இந்தியாவை வற்புறுத்துகிறது. ஆனால் 5ஜி சோதனைகளில் பங்கேற்க ஹவாய் மற்றும் ZTE ஆகியவற்றை இந்திய அரசு அனுமதித்துள்ளது.
ஆனால் 5ஜியின் வணிக வரிசைப்படுத்தல்களில் ஹவாய் பங்கேற்க அனுமதிப்பது மற்றொரு முடிவாக இருக்கும்.
சீன தொலைத் தொடர்பு விற்பனையாளர்களான ஹவாய் மற்றும் ZTE ஆகியவை பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்றும், சீன அரசாங்கத்தின் சார்பாக கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கா கருதுகிறது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் தைவான் உட்பட இரு நிறுவனங்களையும் 5ஜி நெட்வொர்க்குகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது, அதே நேரத்தில் இங்கிலாந்து கோர் அல்லாத பொருட்களை விற்க அனுமதித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்