ஜியோவின் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் அறிமுகம்!

ஜியோவின் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் அறிமுகம்!

ஜியோ ரூ.2,399 ப்ளானை சேர்ப்பதன் மூலம், அதன் நீண்ட கால ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை விரிவாக்கியுள்ளது

ஹைலைட்ஸ்
  • ரூ.2,399 ப்ளான் 365 நாட்கள் செல்லுபடியாகும்
  • நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது
  • பல கூடுதல் தொகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன
விளம்பரம்

கொரோனா வைரஸ் தொற்றால், எல்லோரும் வீட்டில் வேலை செய்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, Jio ரூ.2,399-க்கு புதிய ப்ரீபெய்ட் ப்ளானை கொண்டு வந்துள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது 365 நாட்கள் செல்லுபடியாகும். மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானுடன் "ஒர்க் ஃப்ரம் ஹோம்" ஆட்-ஆன் பேக்கைக் கொண்டு வந்துள்ளது. ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 என்ற ப்ளான்களில் கூடுதலாக 50 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.


2,399 ப்ரீபெய்ட் ப்ளான்:

ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உடன் இந்த ப்ளான் 365 நாட்கள் செல்லுபடியாகும். நிறுவனம் பிப்ரவரியில் ரூ.2,121 ப்ளானை கொண்டு வந்தது. அந்த ப்ளானில் ஜியோ ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் 336 நாட்கள் வேலிடிட்டியை வழங்கியது.


ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 ஆட்-ஆன் பேக்குகள்:

ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானுடன், ஜியோ ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 ஆட்-ஆன் பேக்கை கொண்டுவந்துள்ளது. ரூ.151 ப்ளானில் 30 ஜிபி கூடுதல் டேட்டா, ரூ.201 ப்ளானில் 40 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.251 ப்ளானில் 50 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். அன்றைய டேட்டா பேக் முடிந்த பிறகும் அதிவேக இணையத்தைப் பயன்படுத்த இந்த ப்ளான்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆட்-ஆன் பேக்குகள் வெவ்வேறு வேலிடிட்டியை வழங்குகின்றன. வாடிக்கையாளரின் தற்போதைய ப்ளான் வேலிடிட்டி முடியும் வரை இந்த கூடுதல் பேக்கிலிருந்து கூடுதல் டேட்டாவை பயன்படுத்தப்படலாம்.

கூடுதலாக, ரூ.11, ரூ.21, ரூ.31, ரூ.51 மற்றும் ரூ.101 ஆட்-ஆன் பேக்குகள் முன்பு இருந்ததைப் போலவே அதே பலன்களை வழங்கும்.

ஆட்-ஆன் பேக் டேட்டா (ஜிபி)
11 0.8
21 1
31 2
51 6
101 12
151 30
201 40
251 50

Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Rs 2399 Jio prepaid plan, Jio work from home plan, Jio, Reliance Jio
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. சக்கைபோடு போடும் Marco படம் OTT தளத்தில் வெளியாவது எப்போது?
  2. இந்தியாவுக்கு வரும் புதிய iQOO போன்! சும்மா தெறிக்க விட போகுது
  3. இனிமேல் இப்படியும் வரும் டேட்டா இல்லாத புதிய காலிங் திட்டங்கள் அறிமுகம்
  4. Samsung Galaxy சீரியஸ் செல்போன்கள் சும்மா நின்னு பேசும் பாதுகாப்பு வசதி
  5. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  6. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  7. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  8. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  9. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  10. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »