ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது
இந்திய டெலிகாம் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு வாரியமான ட்ராய் அமைப்பு, ஆப்பிள் நிறுவனத்திடம் தனது செயலிக்கு ஐபோன்களின் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுள்ளது.
ஆனால், இது பயனாளர்களின் சேவை கொள்கைக்கு எதிரானது என்று ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Part of TRAI’s regulation reads:
Every Access Provider shall ensure, within six months’ time, that all smart phone devices registered on its network support the permissions required for the functioning of such Apps as prescribed in the regulations 6(2)(e) and regulations 23(2)(d);
Provided that where such devices do not permit functioning of such Apps as prescribed in regulations 6(2)(e) and regulations 23(2)(d), Access Providers shall, on the order or direction of the Authority, derecognize such devices from their telecom networks.
ஆப்பிள் நிறுவனம் விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதால், ஐபோன் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்குமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவிடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ட்ராய் அமைப்பின் சட்ட விதிமுறைகளான 6(2)(இ) மற்றும் 23(2)(டி) படி, ஏற்கனவே சொல்லப்பட்டு இருக்கும் விதிகளை ஆப்பிள் கடைபிடிக்க மறுப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் தெரிவிக்கையில், ஐஓஎஸ் 10 மற்றும், ஐஓஎஸ் 11, ஐஓஎஸ் 12 ஆகிய இயங்குதளங்களில் இதற்கான அனுமதி தரப்பட்டும், பல வாடிக்கையாளர்கள் பிரச்னையை சந்தித்து வருவதால் மீண்டும் இதுகுறித்து பாதுகாப்பு விஷயங்களை ட்ராய் அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ராய் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்குள்ளான இந்த மோதல், ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications