Photo Credit: BSNL
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது BSNL. IFTV என அழைக்கப்படும் இந்த சேவையானது, கடந்த மாதம் BSNL நிறுவனத்தின் புதிய லோகோ மற்றும் ஆறு புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது BSNL நிறுவனத்தின் ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) நெட்வொர்க்கைப் பயன்படுத்தி பயனர்களுக்கு தெளிவான காட்சிகள் மற்றும் கட்டண டிவி வசதியுடன் நேரடி டிவி சேவைகளை வழங்குகிறது. தேசிய வைஃபை ரோமிங் சேவையை அறிமுகப்படுத்திய பின்னர், நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஹாட்ஸ்பாட்களில் அதிவேக இணையத்தை அணுக இந்த வசதி அனுமதிக்கிறது. இது பயனர்களின் டேட்டா செலவைக் குறைக்கிறது.
BSNL நிறுவனம் புதிய IFTV சேவை மூலம் மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் 500க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை உயர் ஸ்ட்ரீமிங் தரத்தில் அனுபவிக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் வழங்கும் பிற நேரலை டிவி சேவைகளில் ஸ்ட்ரீமிங் மூலம் நுகரப்படும் டேட்டா அளவு மாதாந்திர ஒதுக்கீட்டில் இருந்து கழிக்கப்படும். இது பே டிவி வசதிகளையும் வழங்கும். இது BSNL IFTV வசதியில் இருக்காது.
டிவி ஸ்ட்ரீமிங்கிற்குப் பயன்படுத்தப்படும் டேட்டா தனிப்பட்டது என்றும், அது FTTH பேக்கில் இருந்து கழிக்கப்படாது என்றும் BSNL நிறுவனம் கூறுகிறது. அதாவது டீவி பார்க்க வரம்பற்ற டேட்டா வழங்கப்படும். நேரடி தொலைக்காட்சி சேவையானது BSNL FTTH வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி பிரத்தியேகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அமேசான் ப்ரைம் வீடியோ , டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் , யூடியூப் மற்றும் ZEE5 போன்ற பிரபலமான OTT இயங்குதளங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சப்போர்ட்களும் இதனுடன் கிடைக்கும் என BNSL உறுதிப்படுத்துகிறது . கூடுதலாக இது கேம் ஆப்ஷன்களையும் வழங்கும். இருப்பினும், அதன் ஐஎஃப்டிவி சேவை தற்போது ஆண்ட்ராய்டு டிவிகளில் மட்டுமே சப்போர்ட் செய்யும் என BSNL கூறுகிறது. ஆண்ட்ராய்டு 10 அல்லது அதற்குப் பிறகு இயங்கும் டிவிகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பிஎஸ்என்எல் லைவ் டிவி பயன்பாட்டைப் பதிவிறக்கலாம்.
பிஎஸ்என்எல்லின் ஐஎஃப்டிவி சேவைக்கு வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செல்ப்கேர் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனம் இன்டர்நெட் புரோட்டோகால் டெலிவிஷன் (ஐபிடிவி) சேவையை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து இந்த வசதி வந்துள்ளது. BSNL மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் இயங்குகிறது. சேவைகளை பாதுகாப்பாகவும், மலிவாகவும் மற்றும் நம்பகத்தன்மையுடன் வழங்க உறுதி கொண்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் பாதியில் 1,00,000 பிஎஸ்என்எல் 4G தளங்களை அமைக்க தொலைதொடர்புத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் சிந்தியா கூறினார். அவற்றில் பல, படிப்படியாக வெளியிடப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக 5Gக்கு மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இது தவிர Direct-to-Device - D2D வசதி மூலம் செயற்கைக்கோள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை இணைத்து தடையற்ற இணைப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. வழக்கமான நெட்வொர்க்குகள் அடிக்கடி தோல்வியடையும் அல்லது கிடைக்காத தொலைதூர அல்லது பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிஎஸ்என்எல் கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்