இந்திய தொலைத்தொடர்பு ஒழங்குமுறை ஆணையமான ட்ராய், டிவி சேனல்களுக்கான கட்டணங்களை சமீபத்தில் மாற்றியமைத்தது.
சில நாட்களுக்கு முன்னர் டாடா ஸ்கை நிறுவனம், ஸ்பெஷல் சேனல் பேக்குகளை அறிமுகம் செய்தது
இந்திய தொலைத்தொடர்பு ஒழங்குமுறை ஆணையமான ட்ராய், டிவி சேனல்களுக்கான கட்டணங்களை சமீபத்தில் மாற்றியமைத்தது. இதனால், பல டி.டி.எச் நிறுவனங்கள், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய கட்டணங்களை வகுத்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் டாடா ஸ்கை நிறுவனம், ஸ்பெஷல் சேனல் பேக்குகளை அறிமுகம் செய்தது. இந்நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனமும் சில சிறப்பு பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் மூன்று வகைகளில் தனது சிறப்பு பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. முதல் வகை, இலவச சேனல்களை மட்டும் கொண்ட பேக். இரண்டாவது வகை, விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். மூன்றாவது வகை, ஒரே நிறுவனத்தின் சேனல்களை மட்டும் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்வது.
ட்ராயின் புதிய விதிமுறைகள்படி, ஏர்டெல் டி.டி.எச்-ல் இலசவமாக கிடைக்கப் பெறும் சேனல்களில் முதல் 100-க்கு 153.4 ரூபாய் கட்ட வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் 23.60 ரூபாய் கட்ட வேண்டும்.
ஒரே டி.டி.எச் இணைப்பில் பல டிவி-கள் இருக்கும் பட்சத்தில், இரண்டாவது டிவி-யின் முதல் 100 சேனல்களுக்கு 80 ரூபாயும், அதன் பிறகு ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் 20 ரூபாயு கட்ட வேண்டும்.
ப்ராட்கேஸ்டர் வகை:
டிஸ்கவரி, சோனி, சன் போன்ற பல்வேறு ஒளிபரப்பு நிறுவனங்களின் சேனல்களை மட்டும் தனித் தனியாக சப்ஸ்கிரைப் செய்வதற்கு இந்த வகை ப்ளானில் இடம் உள்ளது. டாடா ஸ்கை போலவே, ஏர்டெல்லும் பல்வேறு ப்ளான்களை ஆப்ஷன்களாக கொடுக்கின்றன.
இந்த வகையில் ஒரு மாதத்திற்கு 0.59 முதல் 171.1 வரை ப்ளான்கள் இருக்கின்றன.
ஏர்டெல் ஏ-லா-கார்டே சேனல்ஸ்:
இந்த வகையில், தேவையான சேனல்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். ஏர்டெல் டி.டி.எச்-ல் மொத்தமாக 563 சேனல்கள் இருக்கின்றன. அதில் 266 சேனல்கள் இலவசமாக கிடைக்கின்றன. மீதம் உள்ள சேனல்களின் விலை மாதத்திற்கு 0.1 முதல் 59 ரூபாய் வரை இருக்கின்றன.
ஏர்டெல் எப்.டி.ஏ:
இலவசமாக கிடைக்கும் சேனல்களுக்கான பேக் இது. இதில் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் தனித் தனியாக பேக்குகள் இருக்கின்றன. இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்த வேண்டாம். அதே நேரத்தில் முன்னர் குறிப்பிட்ட சில அடிப்படை கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Partners AU Small Finance Bank to Add Tap & Pay Support For AU Visa Credit Cards