நேற்றுமுன் தினம் பி எஸ் என் எல் நிறுவனம், தொலைத்தொடர்புத்துறையில் தன் நிலையை தக்கவைத்துக்கொள்ள, 47 ரூபாய்க்கு மற்றும் 198 ரூபாய்க்கு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்திருந்தது. போட்டியில் தன்னை முன்னிருத்திக்கொள்ள நேற்று ஏர்டெல் நிறுவனமும் 129 ரூபாய்க்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 2GB டேட்டாவும், 249 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 4 லட்சம் ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தது.
இதைதொடர்ந்து, ஐடியா நிறுவனமும் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. 999 மற்றும் 1,999 ரூபாய் என மதிப்புகொண்ட இந்த இரு திட்டங்களும், 1 வருட வேலிடிட்டி கொண்டது.
முன்னதாக வோடாபோன் நிறுவனம், இதே மாதிரி 999 மற்றும் 1,999 ரூபாய்க்கு என இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து ஐடியா நிறுவனமும், அதே மாதிரியான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 999 ரூபாய்க்கு துவங்கும் முதல் திட்டத்தை, ஐடியா நிறுவனம் பஞ்சாப் வட்டாரத்தில் மட்டும் வெளியிட்டது.
கடந்த மாதம் வோடாபோன் நிறுவனம், இதே மாதிரியான திட்டத்தை பஞ்சாப் வட்டாரத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில், மொத்தமாக 12GB டேட்டாவும், 365 நாட்களுக்கும் அளவற்ற தொலைபேசி அழைப்புகளும், மற்றும் நாள் ஒன்றிற்கு 100 மெசேஜ்களையும் வழங்கவுள்ளது. இதே மாதிரியான திட்டங்களை அறிவித்திருந்த வோடாபோன் நிறுவனம், அதனுடன் வோடாபோன் ப்ளே-விற்கான சந்தாவையும் இலவசமாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1,999 ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு திட்டம் நாள் ஒன்றிற்கு 1.5GB டேட்டாவுடன், 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டு அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் ஐடியா வாடிக்கையாளர்கள், மொத்தமாக 545.5GB டேட்டாவை பெறுவார்கள். மேலும் 365 நாட்களுக்கும் அளவற்ற தொலைபேசி அழைப்புகள், நாள் ஒன்றிற்கு 100 மேசெஜ்கள், என்ற சலுகைகள் கொண்ட இந்த திட்டத்தை கேரளா மாநிலத்தில் மட்டுமே வெளியிடவுள்ளது.
இதே மாதிரியான திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம், வோடாபோன் நிறுவனம் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை எப்போது இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்போகிறது என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை.
மேலும் சிடி பேன்க்(Citi Bank)-உடன் ஒப்பந்தம் செய்துள்ள ஐடியா நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளவற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் டேட்டா-வை பெற சலுகைகள் வழங்கியுள்ளது. இதன்படி ஐடியா வாடிக்கையாளர்கள் தனது சொந்த தளத்தில் இந்த வங்கிக்கான கிரடிட் கார்டு சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், கார்டு கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்திற்குள், அந்த கார்டை உபயோகப்படுத்தி 4000 ரூபாய்க்கு மேல் செலவளித்தால், உங்களுக்கு 365 நாட்களுக்கான இலவச தொலைபேசி அழைப்புகளும், மேலும் 365-நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5GB என்ற விகிதத்தில் டேட்டாவும் கிடைக்கும் என கூறியுள்ளது. இந்த சலுகை ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்