டிஷ் டிவி, ஏர்டெல், டாடா ஸ்கையின் அதிரடி நடவடிக்கை!

டிஷ் டிவி, ஏர்டெல், டாடா ஸ்கையின் அதிரடி நடவடிக்கை!

ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி மற்றும் டாடா ஸ்கை ஆகியவை 10 சேவை சேனல்களை இலவசமாக வழங்குகின்றன.

ஹைலைட்ஸ்
  • ஏர்டெல் டிஜிட்டல் டிவி & டிஷ் டிவி, 4 புதிய சேனல்களை வழங்ககுகின்றன
  • டாடா ஸ்கை 10 சேவை சேனல்களை இலவசமாகக் கொண்டுள்ளது
  • கூடுதல் சேனல்கள், சமையல், நடனம் & பிற திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன
விளம்பரம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே அடைந்துகிடக்கின்றனர். இதனால், மக்களை மகிழ்விக்க, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி மற்றும் டாடா ஸ்கை இலவச சேவை சேனல்களை வழங்குகின்றன. ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி மற்றும் டாடா ஸ்கை ஆகியவை 10 சேவை சேனல்களை இலவசமாக வழங்குகின்றன.

மூன்று டி.டி.எச் ஆபரேட்டர்களும் சேவை சேனல்களை ஏப்ரல் 14 வரை இலவசமாக வழங்குகிறார்கள். சமையல், நடனம் மற்றும் உடற்பயிற்சி போன்ற திறன்களைக் கற்றுக்கொள்ள உதவும் நோக்கில் இந்த சேனல்களை வழங்குகின்றன.

Airtel Digital TV, சந்தாதாரர்களுக்கு ஆப்கி ரசோய், ஏர்டெல் கியூரியாசிட்டிஸ்ட்ரீம், ஏர்டெல் சீனியர்ஸ் டிவி மற்றும் லெட்ஸ் டான்ஸ் சேவை சேனல்களுக்கு இலவச அணுகலை வழங்குகிறது. 

சேனல் விவரங்கள்:

சேனல் எண் 407 - ஆப்கி ரசோய் சேனல், சமையல் கற்றுகொள்பவர்களுக்கு உதவும். 

சேனல் எண் 419 - ஏர்டெல் கியூரியாசிட்டிஸ்ட்ரீம் சேனலில், space, art, volcanoes, history, travel, cars, architecture மற்றும் dinosaurs ஆகிய ஆயிரக்கணக்கான திரைப்படங்களையும் தொடர்களையும் காணலாம். 

சேனல் எண் 323 - ஏர்டெல் சீனியர்ஸ் டிவி சேனல், வயதானவர்களுக்காக வழங்கப்படுகிறது. 

சேனல் எண் 113 - லெட்ஸ் டான்ஸ் சேனல், இந்தியன் கிளாசிக்கல் நடன வடிவங்களான பரதநாட்டியம் மற்றும் கதக் அதே போன்று ஜாஸ், கண்டெம்ப்ரரி, ஹிப் ஹாப் மற்றும் சால்சா உள்ளிட்ட மேற்கத்திய நடனங்களை கற்பிக்கும் மெய்நிகர் நடன வகுப்புகளுக்கான அணுகலை வழங்கும்.

சேனல் பெயர் சேனல் எண்
Aapki Rasoi 407
Airtel CuriosityStream 419
Airtel Senior TV 323
Let's Dance 113

Dish TV சந்தாதாரர்களும், ஆயுஷ்மான் ஆக்டிவ், ஃபிட்னஸ் ஆக்டிவ், கிட்ஸ் ஆக்டிவ் டூன்ஸ் மற்றும் கிட்ஸ் ஆக்டிவ் ரைம்களை இலவசமாகப் பெறுகிறார்கள். 

சேனல் விவரங்கள்:

சேனல் எண் 130 - ஆயுஷ்மான் ஆக்டிவ் சேனல், மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சேனல் எண் 132 -  சமயம் ஃபிட்னஸ் ஆக்டிவ் சேனல், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

சேனல் எண் 956 - கிட்ஸ் ஆக்டிவ் டூன்ஸ் மற்றும் 

சேனல் எண் 957 - கிட்ஸ் ஆக்டிவ் ரைம்ஸ் இரண்டும் குழந்தைகளுக்கானதாகும். 

சேனல் பெயர் சேனல் எண்
Ayushmaan Active 130
Fitness Active 132
Kids Active Toons 956
Kids Active Rhymes 957

Tata Sky, சந்தாதாரரார்களுக்கு 10 கூடுதல் சேவை சேனல்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

சேனல் விவரங்கள்:

சேனல் பெயர் சேனல் எண்
Dance Studio 123
Fun Learn 664/ 668
Cooking 127
Fitness 110
Smart Manager 701
Vedic Maths 702
Classroom 653
English 660 (Hindi) 1424 (Telugu)
Beauty 119
Javed Aktar 150

வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 080-61999922 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம், தங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு டாடா ஸ்கை கூடுதலாக கடன் வசதியை வழங்குகிறது. 


How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel Digital TV, Dish TV, Tata Sky, DTH, lockdown
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »