பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சேவையை விரிவுபடுத்திய வண்ணமே உள்ளது. அந்த திட்டங்களுடன், சில ஆன்லைன் தளங்களின் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக அளிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. அப்படியாக இப்போது சூப்பர்ஸ்டார் 300 என்ற திட்டத்தை பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட்ற்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். இந்த திட்டத்துடன் ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான சந்தாவையும் இலவசமாக அளிக்கவுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். முன்னதாக இந்த ஆண்டில், பாரத் பைபர் வாடிக்கையாளர்களுக்கு 999 ரூபாய் மதிப்பில் அமேசான் பிரீமியத்தை இலவசமாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
749 ரூபாயில் அறிமுகமாகியுள்ளது இந்த பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சூப்பர்ஸ்டார் 300 திட்டம். ஒரு மாதத்திற்கான 50MBPS வேகத்துடன் வரவுள்ள இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 300GB டேட்டாவையும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், டேட்டாவுடன் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்கவுள்ளது. இதன் மூலம், ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ், டிவி நிகழ்ச்சிகள், படங்கள், விளையாட்டுகளின் நேரலைகள் என அனைத்தையும் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம். தற்போது, ஹாட்ஸ்டார் உலக கோப்பை போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ள இந்த ஒளிபரப்பு ஹாட்ஸடார் பிரீமியம் இருந்தாலே பார்க்க முடியும். இந்த திட்டத்தின்மூலம், உலக கோப்பை போட்டிகளை ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம்.
இந்த ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்கவுள்ள பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சூப்பர்ஸ்டார் 300 திட்டம், நாடு முழுவதும் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தை பெற 18003451500 என்ற இலவச எண்ணிற்கு அழைப்பு விடுத்து, இந்த திட்டத்திற்கான வேண்டுகோளை முன்வைக்கலாம்.
முன்னதாக இந்த ஆண்டின் ஜனவரி மாத துவக்கத்தில் பாரத் பைபர் வாடிக்கையாளர்களுக்கு 999 ரூபாய் மதிப்பில் அமேசான் பிரீமியத்தை இலவசமாக வழங்கியது. இம்மாதிரியான் திட்டங்களை அறிவிக்கும் நிறுவனங்களின் பட்டியில் பி.எஸ்.என்.எல் மட்டும் முன்னிற்கவில்லை. கடந்த மாதம் ஏர்டெல் நிறுவனம், தன் பிலாட்டினம் சந்தாதாரர்களுக்கு Zee5 சந்தாவை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், தன் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்கியது ஏர்டெல் நிறுவனம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்