ப்ரீபெய்ட் ப்ளான் வேலிடிட்டியை குறைத்தது BSNL...!

ப்ரீபெய்ட் ப்ளான் வேலிடிட்டியை குறைத்தது BSNL...!

BSNL, ரூ. 1,188 ப்ரீபெய்ட் ப்ளான், மார்ச் 31 வரை வழங்குகிறது

ஹைலைட்ஸ்
  • BSNL ரூ. 1,188 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் திருத்தப்பட்டுள்ளது
  • இந்த ப்ளான் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • BSNL முன்பு ரூ. 1,188 ப்ளானுக்கு 365 நாட்கள் செல்லுபடியை வழங்கியது
விளம்பரம்

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) முந்தைய 365 நாட்களில் இருந்து 300 நாட்களாக அதன் வேலிடிட்டியை குறைப்பதன் மூலம் ரூ. 1,188 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளனை திருத்தியுள்ளது. “மருதம்” என்று அழைக்கப்படும் ரூ. 1,188 ப்ரீபெய்ட் ப்ளான், முன்னதாக 2020 ஜனவரி 21 வரை வழங்கப்பட்டது. இருப்பினும், பிஎஸ்என்எல் அதன் சமீபத்திய திருத்தத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 31 வரை அதன் கிடைப்பை நீட்டித்துள்ளது. நினைவு கூர, ரூ. 1,188 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் ஆரம்பத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் விளம்பர சலுகையின் கீழ் தொடங்கப்பட்டது. இது அக்டோபர் பிற்பகுதி வரை செல்லுபடியாகும். ஆபரேட்டர், கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஜனவரி வரை சலுகையை நீட்டித்தார்.

பிஎஸ்என்எல், தமிழ்நாடு இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, ரூ. 1,188 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான், 300 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. இது முந்தைய வேலிடிட்டியான 365 நாட்களை விட, 65 நாட்கள் குறைவாகும். இந்த ப்ளான் இன்னும் விளம்பர சலுகையின் கீழ் கிடைக்கிறது மற்றும் ப்ரீகப்படுகிறது என்பதை, அதிகாரப்பூர்வ பட்டியல்  காட்டுகிறது.

டெலிகாம்-மையப்படுத்தப்பட்ட வலைப்பதிவு டெலிகாம் டாக் முதலில் இந்த அப்டேட்டை அறிவித்தது. இருப்பினும், கேஜெட்ஸ் 360 பிஎஸ்என்எல் தமிழ்நாடு தளத்தின் மூலம் மாற்றத்தை சுயாதீனமாக சரிபார்க்க முடிந்தது.

முதலில், பிஎஸ்என்எல் 1,188 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை அக்டோபர் 23 வரை கொண்டுவந்தது. இருப்பினும், இது தனது வாடிக்கையாளர்களுக்கான பலன்களை நீட்டிக்க, அக்டோபர் மாதம் மேலும் 90 நாட்களைச் சேர்த்து, ஜனவரி 21-ஆம் தேதி வரை கிடைக்கச் செய்தது. இந்த ப்ளான் 345 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தொடங்கப்பட்டது, இருப்பினும், நவம்பரில் இது 20 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும்.

நீண்ட கால செல்லுபடியை வழங்குவதைத் தவிர, ரூ. 1,188 பிஎஸ்என்எல் மருதம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் தினசரி 250 நிமிட குரல் அழைப்பு சலுகைகள், 5 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 1,200 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது. சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தும்.

இந்த வார தொடக்கத்தில், பிஎஸ்என்எல் தனது ரூ. 1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானுக்கு, குடியரசு தின சலுகையாக (aunched its Republic Day offer), 71 நாட்கள் அதிகரித்த வேலிடிட்டியை வழங்கியது. இந்த சலுகை ஜனவரி 26 முதல் பிப்ரவரி 15 வரை செல்லுபடியாகும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Rs 1188 BSNL prepaid plan, BSNL Marutham, Bharat Sanchar Nigam Limited, BSNL
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »