பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் ரூ. 1,188 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதலாக 20 நாட்களை சேர்த்துள்ளது. புதிய அப்டேட் வந்த சில வாரங்களுக்கு பிறகு அரசுக்கு சொந்தமான டெல்கோ ரூ. 1,188 BSNL ப்ரீபெய்ட் திட்டத்தை ஜனவரி 21, 2020 வரை நீட்டித்துள்ளது. "மருதம்" என்று அழைக்கப்படும் ரூ. 1,188 ப்ரீபெய்ட் திட்டம் முதலில் ஜூலை முதல் அக்டோபர் 23 வரை விளம்பர சலுகையின் கீழ் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களுக்கு மட்டுமே. ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற வட்டங்களில் இந்த BSNL 1,149 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒத்துபோகும்.
345 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தொடங்கப்பட்ட ரூ. 1,188 BSNL மருதம் ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது 20 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும் தன்மையைக் காட்டுகிறது. இந்த மாற்றம் BSNL தமிழ்நாடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது ஜனவரி 16, 2020 வரை பொருந்தும்.
BSNL அதன் ரூ. 1,188 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியை அப்ஃக்ரேட் செய்தது. இது முன்னர் வழங்கப்பட்ட அதே பலன்களை இன்னும் வழங்கி வருகிறது. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு வட்டம் மற்றும் தேசிய ரோமிங்கில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் ஒரு நாளைக்கு 250 நிமிட குரல் அழைப்பைப் பெறுவார்கள். மேலும், இந்த திட்டம் 5 ஜிபி டேட்டா மற்றும் 1,200 எஸ்எம்எஸ் செய்திகளுக்கு செல்லுபடியாகும்.
BSNL ஆரம்பத்தில், அக்டோபர் 23 வரை விளம்பரக் காலத்திற்கு ரூ. 1,188 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆயினும்கூட, கடந்த மாதம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதன் பலன்களை நீட்டிக்க மேலும் 90 நாட்களைச் சேர்த்தது.
ரூ. 1,188 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி அப்ஃக்ரேட் Telecom Talk-ல் காணப்பட்டது. இருப்பினும், தமிழ்நாடு தளத்தில் கிடைக்கும் பட்டியலிலிருந்து கேஜெட்ஸ் 360 சுயாதீனமாக மாற்றத்தை சரிபார்க்க முடிந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்