ஜியோ நிறுவனத்தில் டபுள் தமாக்கா ஆஃபர்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 149 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால், நாள் ஒன்றுக்கு 4 ஜிபி தினசரி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஃபிஃபா உலக கோப்பை சிறப்பு டேட்டா STV 149 என பெயரிடப்பட்டுள்ளது. ஃபிஃபா தொடர் முடியும் வரை இந்த திட்டம் இருக்கும். ஜியோ அளித்த 149 ரூபாயில், ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா, இலவச அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 28 நாட்களுக்கு கொடுக்கும் திட்டத்துக்கு போட்டியாகவும் பி.எஸ்.என்.எல் இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் 149 ரூபாய்க்கு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, கூடுதல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுடன் 28 நாட்களுக்கான புதிய திட்டத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஜுன் 14 ஆம் தேதியில் இருந்து இந்தியாவிலுள்ள அனைத்து இடங்களிலும் இந்த திட்டம் பெற முடியும். ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் ஒப்பிடுகையில், அதிக டேட்டா சேவையை பிஎஸ்என்எல் தருகிறது. ஆனால், இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் இல்லை. இந்த புதிய திட்டத்தின் மூலம், நாட்டிலுள்ள இளைஞர்களை கவரும் விதமாக, கால்பந்து தொடர் தொடங்கும் நேரத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் ப்ரிபெயிட் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் இணையத்தளத்தில் அல்லது அனைத்து ரீசார்ஜ் கடைகளில் இந்த திட்டத்தை பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த வாரம், FTTH எனப்படும் பைபர் டூ ஹோம் சேவையை பிஎஸ்என்எல் மேம்படுத்தியது. அதில் ஃபிப்ரோ காம்போ ULD 777 மற்றும் ஃபிப்ரோ காம்போ ULD 1277 அகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஃபிப்ரோ காம்போ ULD 777 திட்டத்தில் 500 ஜிபி டேட்டா 50 Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு 777 ரூபாய்க்கும், ஃபிப்ரோ காம்போ ULD 1277 திட்டத்தில் 750 ஜிபி டேட்டா 100 Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு 1277 ரூபாய்க்கும் வெளியிடப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்