கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பி.எஸ்.என்.எல் அறிவித்தது.
பிஎஸ்என்எல் கடந்த வாரம் பயனர்களுக்கான ஒர்க் @ ஹோம் இணைய தொகுப்பை அறிவித்தது
coronavirus தொற்று காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதுதொடர்பாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மார்ச் 22-க்குப் பிறகு காலாவதியான பயனர்களுக்கு, இந்த வேலிடிட்டியை ஏப்ரல் 20 வரை நீட்டிப்பதால், அவர்கள் "தொடர்ந்து இன்கம்மிங் அழைப்புகளைப் பெறுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கும் ரூ.10-க்கு, இலவச டாக் டைமை வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
"பிஎஸ்என்எல்லின் ப்ரீபெய்ட் சிம்கள் ஏப்ரல் 20 வரை நிறுத்தப்படாது. அவுட்கோயிங் காலுக்கு, இன்று முதல் ரூ.10 ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
தொழில்நுட்ப நிறுவனங்களான, OnePlus, Realme மற்றும் ஹவாய் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையை எளிதாக்குவதற்காக, உத்தரவாத காலத்தை நீட்டிப்பதாக அறிவித்தன. இதேபோல், தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை COVID-19 சுய நோயறிதலுக்கான புதிய கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
"ஊரடங்கு காலத்தில், பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதற்கு" Go Digital " செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று BSNL, CMD பிரவீன் குமார் புர்வார் கூறினார். ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யவிருக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் MyBSNL மொபைல் செயலி, பிஎஸ்என்எல் வலைத்தள சேவைகளைப் பயன்படுத்தலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed