பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பு கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது
வாடிக்கையாளர்களுக்கு ஏற்றத் திட்டங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் புதிதாக புக் மை ஃபைபர் (BookMyFiber) என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி எளிதாக இணைய இணைப்பு பெற முடியும்.
ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல், வோடஃபோன் போன்ற தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்தாலும், அதற்கு இணையாக மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையார்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள், பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், தற்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் BookMyFiber என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பூலோக வரைபடம் காட்டப்படும். அதில் நமது இருப்பிடத்தை ஜூம் செய்து குறிப்பிட்டாலே போதும், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் ஃபைபர் இன்டர்நெட் கனெக்ஷன் வழங்கப்பட்டு விடும். இது ஜியோவின் ஃபைபர் திட்டத்துக்குப் போட்டியாக அமைகிறது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் உயரதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பிடத்தைக் குறிப்பிடும் போது, அதன் அட்சரேகை, தீர்க்கரேகை பதிவாகிவிடும். பின்பு, இந்தத் தகவல்கள் உள்ள FTTH அப்படியே FMS அமைப்பிற்கு தெரிவித்து, இணைய இணைப்புக்கான கோரிக்கை நிறைவேற்றப்படும்.
பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் இந்த BookMyFiber போர்ட்டல் பயன்படுத்துவதற்கு மிகஎளிதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் இதனை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்வையிட முடியும்.
பின்பு, அதில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பெயர், முகவரி, பின்கோடு, மாநிலம், இமெயில் முகவரி போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து ஃபைபர் கனெக்ஷன் திட்டங்கள் பட்டியலிடப்படும். அதில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றத் திட்டங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பு கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப விலை 430 ரூபாய் ஆகும். சில தொலைத்தொடர்பு வட்டங்களில் மட்டும் 499 ரூபாய் முதல் தொடங்குகிறது.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series