புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது BSNL! டேட்டா எவ்வளவு தெரியுமா?.....

புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது BSNL! டேட்டா எவ்வளவு தெரியுமா?.....

BSNL புதிய டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

ஹைலைட்ஸ்
  • BSNL புதிய திட்டம் AP மட்டும் Telangana வட்டங்களில் மட்டுமே உள்ளது
  • இந்த திட்டம் 180 நாட்கள் வரை செல்லுபடியாகும்
  • இந்த திட்டம் நவம்பர் 15 ஆம் தேதியுடன் காலாவதியாகும் என்று கூறப்படுகிறது
விளம்பரம்

அரசுக்கு சொந்தமான டெல்கோ பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டேட்டா பயனை மட்டுமே வழங்குகிறது. இது 180 நாட்களுக்கு (long-term validity) 200 ஜிபி சேகரிக்கப்பட்ட டேட்டாவை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த புதிய திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே இப்போது உள்ளது. மேலும், குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் பயன்கள் எதுவும் இல்லை. ரூ. 698 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் காலாவதியாகும். டேட்டா பயனை மட்டுமே எதிர்பார்க்கும் அனைத்து பயனர்களும், இந்த திட்டத்தை பரிசீலிக்கலாம்.

இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 698 ப்ரீபெய்ட் திட்டம் இணையதளத்தில் நேரலையில் உள்ளது. இது 180 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 200 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டம் குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் செய்தி வசதி போன்ற வேறு எந்த பயன்கலையும் தொகுக்கவில்லை. இந்த திட்டம் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டத்தில் மட்டுமே செயல்படுவதோடு, இந்த வட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த ரீசார்ஜ் பெற முடியும். இந்த புதிய திட்டத்தை முதலில் டெலிகாம் பேச்சு (Telecom Talk) கண்டறிந்தது. மேலும் இந்த புதிய ரூ. 698 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நேரலையில் இருக்கும். இந்த திட்டம், அடுத்த மாதம் நவம்பர் 15 ஆம் தேதியுடன் காலாவதியாகும் என்று கூறப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ்களுக்காக மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் இலவச குரல் அழைப்பை பிஎஸ்என்எல் சமீபத்தில் அறிவித்தது. முன்னதாக, மும்பை மற்றும் டெல்லி வட்டங்களைத் தவிர, இலவச குரல் அழைப்பை பிஎஸ்என்எல் வழங்கியது. ஏனென்றால் அங்கு எம்டிஎன்எல் (MTNL) இயங்கியது. ஆனால் அது ரூ. 429, ரூ. 485, மற்றும் ரூ. 666 ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டதாகும். இப்போதைக்கு, இந்த ரீசார்ஜ்கள் மும்பை மற்றும் டெல்லி வட்டங்களை குரல் அழைப்பு பயனைக் காண்கின்றன. ஆனால், அதிக ரீசார்ஜ் செய்வது அதே மாற்றத்தை விரைவில் பிரதிபலிக்கும். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் அறிவித்த இணைப்பு, குரல் அழைப்பு சலுகைகளுடன் தொடங்கி, தற்போதுள்ள சந்தாதாரர்களுக்கு அதிக பயன்களை அளித்துள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL, BSNL Rs 698 Prepaid Plan
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »