5GB டேட்டாவுடன் ரூ.109 ‘Mithram Plus’ ப்ரீபெய்ட் ப்ளானை அறிமுகப்படுத்திய BSNL!  

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 20 டிசம்பர் 2019 15:00 IST
ஹைலைட்ஸ்
  • கேரள இணையதளத்தில் ரூ. 109 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை பட்டியலிட்டுள்ளது
  • இந்த ப்ரீபெய்ட் திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும்
  • BSNL, தமிழகத்தில் ரூ.110 ரீசார்ஜில் முழு பேச்சு நேரத்தையும் வழங்குகிறது

கேரளாவில் ரூ. 109 ப்ளானை சேர்ப்பதன் மூலம் BSNL அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவை விரிவாக்குகிறது

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) 90 நாட்கள் செல்லுபடியுடன் ரூ. 109 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “மித்ரம் பிளஸ்” ("Mithram Plus") என்று அழைக்கப்படும் ரூ. 109 BSNL ப்ரீபெய்ட் திட்டம் 250 நிமிட தினசரி குரல் அழைப்போடு மொத்தம் 5 ஜிபி டேட்டா ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ப்ரீபெய்ட் ப்ளான் தற்போதுள்ள “மித்ரம்” (Mithram) திட்டத்துடன் அமர்ந்துள்ளது. இதன் கீழ், அரசுக்கு சொந்தமான டெல்கோ ரூ. 40 மற்றும் ரூ. 49 விலையில் 500MB டேட்டாவுடன், இரண்டும் 15 நாட்களுக்கு செல்லுபடியை வழங்குகிறது.

BSNL கேரள இணையதளத்தில் உள்ள பட்டியலின்படி, ரூ. 109 மித்ரம் பிளஸ் ப்ளான் (Mithram Plus plan) மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் தினசரி 250 நிமிட குரல் அழைப்பை வழங்குகிறது. இந்த திட்டம் 5GB டேட்டாவையும் வழங்குகிறது.

கொடுக்கப்பட்ட குரல் அழைப்பு பலன்களை பதிவிடுங்கள், பயனர்கள் அனைத்து on-net local மற்றும் STD அழைப்புகள்களுக்கு வினாடிக்கு 1.2 பைசா கட்டணம் வசூலிக்கப்படுவார்கள். அதே சமயம் off-net local மற்றும் STD அழைப்புகளுக்கு வினாடிக்கு 1.5 பைசா செலவாகும். மேலும், உள்ளூர் on-net national SMS செய்திகளுக்கு ஒரு செய்திக்கு 70 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் off-net SMS செய்திகள் ஒரு செய்திக்கு 80 பைசா செலவில் கிடைக்கும்.

புதிய ரூ. 109 ப்ரீபெய்ட் ப்ளான் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும், குரல் அழைப்பு நிமிடங்கள் மற்றும் டேட்டா ஒதுக்கீடு வடிவத்தில் தொகுக்கப்பட்ட பலன்கள் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ப்ளான் தற்போது கேரள வட்டத்தில் உள்ள BSNL ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ரூ. 109 BSNL ப்ரீபெய்ட் ப்ளானை DreamDTH முதலில்  கண்டுபிடித்தது. இருப்பினும், கேரள வட்டத்தில் அதன் இருப்பை, கேஜெட்ஸ் 360 சுயாதீனமாக உறுதிப்படுத்த முடிந்தது.

கேரள மக்களுக்கான ரூ. 109 ப்ரீபெய்ட் திட்டத்துடன், BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக தமிழக வட்டத்தில் முழு பேச்சு நேர சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகை ரூ. 110 ப்ரீபெய்ட் ப்ளான் மற்றும் ஜனவரி 1 வரை செல்லுபடியாகும். coupon top-up, mobile wallets அல்லது Web portals போன்ற ஆதாரங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் முழு பேச்சு நேரத்தையும் பெறலாம்.

BSNL Revises Validity of Rs. 118, Rs. 187, Rs. 399 Prepaid Plans: Everything You Need to Know

BSNL Revises Rs. 29, Rs. 47 Prepaid Plans With Reduced Validity

BSNL Updates Rs. 1,188 'Marutham' Prepaid Plan With 365 Days Validity

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பெர்பாமன்ஸ்ல மிரட்ட வருது Realme 16 Pro+! அன்டுடு ஸ்கோர் பாத்தா அசந்து போயிருவீங்க
  2. இனி WhatsApp Status-ல பட்டாசு வெடிக்கலாம்! 2026 நியூ இயருக்காக மெட்டா கொண்டு வந்த புது மேஜிக்
  3. இனி Tablet-ல எழுதறது Real-ஆ இருக்கும்! TCL கொண்டு வந்த புது மேஜிக் - Note A1 NxtPaper
  4. போட்டோ எடுக்கும்போது இனி கடுப்பாக வேண்டாம்! Galaxy S26 Ultra-ல இருக்குற அந்த ஒரு ரகசியம்
  5. 200MP கேமரா.. 6000mAh பேட்டரி! Oppo Find N6-ல இவ்வளவு விஷயமா? மிரண்டு போன டெக் உலகம்
  6. விவோ ரசிகர்களுக்கு ஒரு ஷாக் அப்டேட்! X300 Ultra-வில் கேமரா பட்டன் கிடையாதா? ஆனா டிஸ்ப்ளே சும்மா தெறிக்குது
  7. சாம்சங்-ல இருந்து ஒரு "கனெக்டிவிட்டி" புரட்சி! டவர் இல்லாத காட்டுல கூட இனி போன் பேசலாம். Galaxy S26-ல் வரப்போகும் அந்த மேஜிக் பீச்சர்
  8. ஜிம்முக்கு போகாமலே ஃபிட் ஆகணுமா? அமேசான்ல ஆஃபர் மழை! ₹45,000 ட்ரெட்மில் வெறும் ₹10,999-க்கு
  9. ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு புதிய கேமரா அரக்கன்! 7000mAh பேட்டரி + ரெண்டு 200MP கேமரான்னு Oppo Find X9s மரண மாஸா வருது
  10. ஜனவரி 6-க்கு ரெடியா இருங்க! 7000mAh பேட்டரி + 200MP கேமரான்னு Realme 16 Pro+ மரண மாஸா வருது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.