Airtel-ன் Wi-Fi Calling Service - மேலும் 6 ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 22 டிசம்பர் 2019 10:32 IST
ஹைலைட்ஸ்
  • S10, S10+ ஏர்டெல் வாடிக்கையாளர்கள் Wi-Fi அழைப்பை உள்ளமைக்க முடியும்
  • இந்த சேவை டெல்லி/NCR-ல் நேரலையில் உள்ளது
  • ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கூடுதல் அழைப்பு செயலி, SIM தேவையில்லை

வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் வைஃபை அழைப்பைத் தொடங்கலாம்

சமீபத்தில் இந்தியாவில் தனது வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அறிமுகப்படுத்திய பின்னர், பாரதி ஏர்டெல் வெள்ளிக்கிழமை தனது வைஃபை அழைப்பு சேவைக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஆறு புதிய சாதனங்களைச் சேர்த்தது.

இப்போது, ​​Samsung Galaxy S10, Galaxy S10+, Galaxy S10eGalaxy M20OnePlus 6 மற்றும் OnePlus 6T ஆகியவற்றில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் வைஃபை அழைப்பை உள்ளமைக்க முடியும். இது அவர்களின் வீடு/அலுவலகத்திற்குள் வைஃபை வழியாக voice over-க்கு மாறுவதற்கு உதவுகிறது.

ஏர்டெல் வைஃபை அழைப்பு வழியான அழைப்புகளுக்கு, கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. இந்த சேவை டெல்லி/NCR-ல் நேரலையில் உள்ளது மற்றும் வரும் நாட்களில் முக்கிய இந்திய நகரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் அழைப்பு செயலி, சிம் இல்லாமல், வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் வைஃபை அழைப்பைத் தொடங்கலாம்.

கூடுதலாக, Xiaomi Redmi K20, Redmi K20 Pro, Poco F1, Samsung Galaxy J6, Samsung Galaxy A10s, Samsung Galaxy On6, Samsung Galaxy M30s, OnePlus 7, OnePlus 7 Pro, OnePlus 7T மற்றும் OnePlus 7T Pro-வைத் தவிர, iPhone 6s, iPhone 6s Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone 8, iPhone 8 Plus, iPhone X, iPhone XR, iPhone XS, iPhone XS Plus, iPhone 11, iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Plus வைத்திருக்கும் நுகர்வோர் ஏற்கனவே இந்த சேவையை அணுகியுள்ளனர்.

பயனர்கள் தங்கள் போனில் வைஃபை அழைப்பு அம்சத்தை இயக்க வேண்டும். ஏர்டெல் வைஃபை அழைப்பைப் பயன்படுத்தத் தொடங்க சமீபத்திய மென்பொருள் உருவாக்கத்திற்கு மேம்படுத்த வேண்டும். மேலும், பயனர்கள் சிறந்த முடிவுகளுக்கு VoLTE-ஐ இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். டேட்டா நுகர்வு பொறுத்தவரை, 5 நிமிட வைஃபை அழைப்பு 5MB-க்கும் குறைவான டேட்டாவை பயன்படுத்தும். வைஃபை நெட்வொர்க் முடக்கப்பட்டால், நடந்துகொண்டிருக்கும் வைஃபை அழைப்பு தடையின்றி VoLTE-க்கு மாற்றப்படும்.

ஏர்டெல் வைஃபை அழைப்பின் பலன்கள் பற்றி பேசுகையில், தொலைதொடர்பு ஆபரேட்டர் பயனர்கள் புதிய சிம் வாங்கத் தேவையில்லை என்றும், வைஃபை நெட்வொர்க்குடன் எந்த இடத்திலிருந்தும் அழைப்பு அல்லது செய்தி அனுப்பலாம் என்றும் கூறுகிறார். மேலும், புதிய வைஃபை அடிப்படையிலான அழைப்பு சேவை VoLTE உடன் ஒப்பிடும்போது சிறந்த அழைப்பு அமைவு நேரம் மற்றும் ஆடியோ தரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், பயனர்கள் புதிய ப்ளான்கலைத் தேர்வுசெய்யவோ அல்லது ஏர்டெல் வைஃபை அழைப்பு சேவையைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. வைஃபை அழைப்பு வழக்கமான அழைப்பைப் போலவே கருதப்படும். மேலும், பயனரின் தற்போதைய ரீசார்ஜ் அல்லது முதன்மை இருப்புக்கு எதிராக செல்லும்.

Airtel Wi-Fi Calling Launched in Delhi NCR

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: AIrtel WiFi Calling, Airtel
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  2. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  3. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  4. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  5. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  6. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  7. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  8. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  9. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  10. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.