வாடிக்கையாளர்களுக்கு நன்றி சொலும் விதமாக ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய பிராட்பேண்ட் சேவைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சேவைகளில் முன்னதாகவே 1,099 ரூபாயிலிருந்து இருக்கும் ஏர்டெல் 'V-பைபர்' பிராட்பேண்ட் சேவையை புதிப்பித்து அளித்துள்ளது. அதன்படி, இந்த சேவைகளுடன் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றின் சேவைகளை இலவசமாக அளிக்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம். இதுமட்டுமின்றி ஏர்டெலில் 129 ரூபாயிற்கு மேல் ரீ-சார்ஜ் செய்பவர்களுக்கு ஹெல்லோ டியூன்ஸ் சேவையை இலவசமாக வழங்கவுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில், 1,299 ரூபாயிற்கு மேலான போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கு, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் சந்தாவை இலவசமாக அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் 'V-பைபர்' 1,099 ரூபாய் பிராட்பேண்ட் திட்டம்
ஏர்டெல் 'V-பைபர்' திட்டத்தில் 1,099 ரூபாயிற்கு ரீ-சார்ஜ் செய்தால், 100Mbps இன்டெர்நெட் வேகத்துடன் 300GB டேட்டாவை வழங்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த சேவையுடன் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றின் சேவைகளை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் 'V-பைபர்' 1,599 ரூபாய் பிராட்பேண்ட் திட்டம்
இரண்டாவதாக 1,599 ரூபாயிற்கான ஏர்டெல் 'V-பைபர்' திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 300Mbps இன்டெர்நெட் வேகம் இந்த திட்டத்தில் 600GB டேட்டாவை வழங்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த சேவையுடன் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றின் சேவைகளை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் 'V-பைபர்' 1,999 ரூபாய் பிராட்பேண்ட் திட்டம்
மற்றொரு திட்டமான1,999 ரூபாய் ஏர்டெல் 'V-பைபர்' பிராட்பேண்ட் திட்டம் 1,099 ரூபாய் திட்டம் போலவே அமைந்துள்ளது. இந்த திட்டம் 100Mbps இன்டெர்நெட் வேகத்தை கொண்டுள்ளது. இந்த திட்டத்தில், இன்டெர்நெட் பயன்பாட்டிற்கு எந்த ஒரு அளவையும் அறிவிக்கவில்லை. அளவற்ற டேட்டா பயன்பாட்டுடன் இந்த சேவையை அறிவித்துள்ளது ஏர்டெல். மற்ற சேவைகள் போன்றே இந்த சேவையும் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றின் இலவசமான சந்தாக்களுடனே வந்துள்ளது
இந்த மூன்று திட்டங்களும் ஒரு மாத கால அளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்