பாரதி ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவை ரூ. 279 மற்றும் ரூ. 379 ப்ளான்களை சேர்த்துள்ளது. புதிய ப்ளான்கள் அதிவேக டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் செய்தி பலன்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், Wynk Music மற்றும் Xstream apps-க்கான அணுகலை ஏர்டெல் வழங்குகிறது. இந்த தொடரில் ரூ. 279 ஏர்டெல் ப்ரீபெய்ட் ப்ளானும் HDFC Life-ல் இருந்து ரூ. 4 லட்சம் கால ஆயுள் காப்பீட்டைக் கொண்டுள்ளது. புதுடெல்லியை தளமாகக் கொண்ட டெல்கோ இந்தியாவில் அதன் கட்டணங்களை உயர்த்திய சில வாரங்களிலேயே ரூ. 279 மற்றும் ரூ.379 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல் இணையதளத்தில் உள்ள பட்டியலின்படி, ரூ. 279 ப்ரீபெய்ட் ப்ளான் தினசரி 1.5 ஜிபி அதிவேக டேட்டா ஒதுக்கீடு மற்றும் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் குரல் அழைப்புகளுடன், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளுடன் கொண்டு வருகிறது. ப்ரீபெய்ட் ப்ளான் HDFC Life-ன் ஆயுள் காப்பீடு மற்றும் Shaw Academy-யில் இருந்து நான்கு வார படிப்புகள், Wynk Music அணுகல் மற்றும் Airtel Xstream மூலம் பிரீமியம் உள்ளடக்கம் போன்ற கூடுதல் பலன்களையும் கொண்டுவருகிறது. வாடிக்கையாளர்கள், FASTag வாங்கும்போது, ரூ. 100 கேஷ்பேக்கையும் பெறலாம்.
ரூ. 279 ப்ரீபெய்ட் ப்ளானுக்கு கூடுதலாக, ரூ. 379 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் 6 ஜிபி அதிவேக டேட்டா அணுகல், 900 எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த ப்ளான் Shaw Academy, Wynk Music மற்றும் Airtel Xstream app-ல் இருந்து நான்கு வார படிப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. ரூ. 379 ப்ரீபெய்ட் ப்ளானும், FASTag வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 100 கேஷ்பேக்கை கொண்டுவந்துள்ளது.
ரூ. 379 ஏர்டெல் ப்ரீபெய்ட் ப்ளானானது வோடபோன் ஐடியா வழங்கும் ரூ. 379 ப்ரீபெய்ட் ப்ளானுக்கு எதிராக போட்டியிடுகிறது. பிந்தையது 84 நாட்கள் 1,000 எஸ்எம்எஸ் செய்திகளுடன், ஒரே மாதிரியான குரல் அழைப்பு மற்றும் அதிவேக டேட்டா பலன்களை வழங்கியது.
ஏர்டெல்லின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து Telecom Talk முதலில் அறிவித்தது. இருப்பினும், கேஜெட்ஸ் 360 அதிகாரப்பூர்வ ஏர்டெல் வலைத்தளத்தின் மூலம் இரண்டு புதிய ப்ளான்களையும் சுயாதீனமாக சரிபார்க்க முடிந்தது.
Airtel, Vodafone Idea New Plans Live: How the Updated Prepaid Recharge Plans Compare
Airtel New Plans: Prepaid Prices Hiked, Long-Term Tariffs Start at Rs. 1,498
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்